நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன், ஓவரா பண்ணாதீங்க; கோவப்பட்ட பிக்பாஸ் பிரபலம்; சேரை உதைத்த புகழ்!

நடிகர் புகழ் நிகழ்ச்சி ஒன்றில் கோபப்பட்டு சேரை தூக்கு வீசியுள்ளார். எதற்காக இப்படி நிகழ்ச்சிக்கு இடையில் அவர் நடந்து கொண்டார் என்று பார்ப்போம்.

நடிகர் புகழ் நிகழ்ச்சி ஒன்றில் கோபப்பட்டு சேரை தூக்கு வீசியுள்ளார். எதற்காக இப்படி நிகழ்ச்சிக்கு இடையில் அவர் நடந்து கொண்டார் என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
pugazh

விஜய் டி.வி. புகழ், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ஒரு 'கோமாளி'யாக பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்தார். அவரது நகைச்சுவை மற்றும் மிமிக்ரி திறமைக்காக அவர் அறியப்படுகிறார். 'கலக்கப் போவது யாரு?' நிகழ்ச்சியில் தேர்வாகி வெற்றி பெற்ற பிறகு, அவருக்கு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisment

இந்த நிகழ்ச்சி அவருக்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்ததால், தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரித்தன. சிக்ஸர், மிஸ்டர் ஜூ கீப்பர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கோலிசோடா ரைசிங் என்ற சீரிஸிலும் நடித்துள்ளார்.

soundarya

சௌந்தர்யா நஞ்சுண்டன் என்பவர் ஒரு நடிகை மற்றும் மாடல். இவர் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 8' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்.'பிக் பாஸ் தமிழ் சீசன் 8' நிகழ்ச்சியில் சௌந்தர்யா இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.வேற மாறி ஆபிஸ் என்ற சீரிஸில்முக்கியகதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் விருந்தினராகவும், 'குக் வித் கோமாளி' சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாகவும் பங்கேற்றுள்ளார்.

Advertisment
Advertisements

இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ் மற்றும் சௌந்தர்யா இருவரும் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் புகழ் கோபப்பட்டு சேரை தூக்கி வீசியுள்ளார். சௌந்தர்யா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் எதற்காக என்னை அழைத்தீர்கள் நான் பேசுவதை கேட்கவே இல்லையே என்று கோபப்பட்டு மேடையில் சௌந்தர்யா பேசியுள்ளார். 

அப்படி அவர் பேசும்போது புகழ் நான் அதை செய்யவில்லை என்னை பார்த்து ஏன் கேட்கிறீர்கள் என்று சேரை உதைத்து தள்ளி இருக்கிறார். மேலும் இங்கு டாஸ்க் செய்ய தானே வந்தோம் ஏன் பேசுவதை கேட்காமல் ரொம்ப ட்ரமாடிக்காக நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார் அதற்கு புகழ் அப்படி இல்லை என்று கூறி சமாதானப்படுத்தவும் செய்து இருக்கிறார். மேலும் அங்கு இருந்த ஜட்ஜுகளும் சௌந்தர்யாவை கலாய்த்து பேசியுள்ளனர்.

Vijaytv Pugazh Soundarya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: