Advertisment

மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பு நடத்திய புகழ்; வாழ்த்திய விஜய் டிவி நட்சத்திரங்கள்

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் மனைவி வளைகாப்பு; ஷிவாங்கி, நாஞ்சில் விஜயன் நேரில் வாழ்த்து

author-image
WebDesk
New Update
pugazh

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் மனைவி வளைகாப்பு

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான காமெடி நடிகர் புகழ் தன் மனைவியின் வளைகாப்பை கோலாகலமாக நடத்தி ருக்கிறார்.

Advertisment

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் பெரிதாக பிரபலமாகவில்லை என்றாலும், பின்னர் சிரிச்சா போச்சு டீமில் இணைந்து வளரத் தொடங்கினார். தொடர்ந்து விஜய் டிவியின் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு நகைச்சுவை செய்து வந்தார். இந்தநிலையில், புகழை மிகவும் பாப்புலர் ஆகியது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். தனது வித்தியாசமான ரியாக்‌ஷன்களுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழுக்கு அந்நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய புகழுக்கு படிப்படியாக சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. அந்த வகையில் சந்தானத்தின் சபாபதி படம் மூலம் அறிமுகமான புகழ், பின்னர் சூர்யா உடன் எதற்கும் துணிந்தவன், சசிகுமார் உடன் அயோத்தி, விஜய் சேதுபதி உடன் டி.எஸ்.பி, கௌதம் கார்த்திக் உடன் 1947 போன்ற படங்களில் நடித்தார்.

இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த புகழ், ஜூ கீப்பர் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஜூ கீப்பர் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இதற்கிடையில் புகழ் கடந்தாண்டு தனது நீண்ட காதலியை திருமணம் செய்துக் கொண்டார். நீண்ட நாள் காதலியான பென்ஸி என்பவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் புகழ் கரம்பிடித்தார். திருமணமாகி ஒராண்டு நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் புகழ் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை ஒரு அழகிய போட்டோஷூட் மூலம் அறிவித்தார்.

இந்நிலையில், புகழ் இன்று தன் மனைவி பென்சிக்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார். கோலாகலமாக நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்வில் குக் வித் கோமாளி பிரபலமும் அவரின் உடன்பிறவா தங்கச்சியுமான ஷிவாங்கி, விஜய் டிவி காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் பென்சிக்கு ஷிவாங்கி நலங்கு வைத்தார். இந்த வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijaytv Pugazh Vijaytv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment