விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஹிரோயின் சந்தியாவைப் பற்றி ஹீரோ சரவணன் மனதில் இருக்கும் தவறான புரிதல் எப்போது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஒரு முடிவை அறிவிக்கும் விதமாக, இந்த வாரம் ராஜா ராணி 2 சீரியல் புரமோ வெளியாகி உள்ளது.
ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியம் உள்ள சந்தியா, பெற்றோர்களின் மறைவுக்கு பிறகு, அவளுடைய அண்ணன் அமெரிக்கா செல்ல இருந்ததால் அவளை படிக்காத சரவணனுக்கு திருமணம் செய்து வைக்கிறான். அங்கே சந்தியாவும் சரவணனும் கணவன் மனைவியாக வாழவில்லை. சந்தியா முதலில் சரவணனை விட்டு பிரிந்து போக வேண்டும் என்ற நினைவுடன் இருக்கிறாள். பிறகு, சரவணனின் நல்ல குணங்களையும் அவனுடைய நல்ல மனதையும் புரிந்துகொண்டு அவனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறாள்.
இதனிடையே, சந்தியா தனது மாமியார் சிவகாமி வைத்த எல்லா பரீட்சைகளிலும் வெற்றி பெற்று அவருடைய நம்பிக்கையையும் பெறுகிறாள். நாத்தனார் பார்வதி தவறான நடத்தையுள்ள விக்கியை காதலிக்கிறாள். அவன் பார்வதியை பலாத்காரம் செய்ய முயன்றபோது காப்பாற்றுகிறாள். அவனிடம் இருந்த பார்வதியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் திட்டமிட்டு அதிரடியாக கைப்பற்றி அழிக்கிறாள். சந்தியாவை மனப்பூர்வமாக காதலிக்கும் பாஸ்கர் உடன் நிச்சயதார்த்தமும் உறுதியாகிறது. சந்தியாவும் சரவணனின் குடும்பம்தான் இனிமேல் தன்னுடைய குடும்பம் என்று விரைவில் கணவன் மனைவியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறாள்.
ஆனால், அதற்கு முன்னதாக, சந்தியா சரவணனை விட்டு பிரிந்து செல்லும் மனநிலையில் இருந்தபோது, சந்தியாவின் தோழி, நீ அந்த குடும்பத்தில் மாட்டிக்கொண்டு கஷ்டப்படாதே, விவாகரத்து வாங்கிக்கொண்டு உன்னுடைய லட்சியப்படி ஐபிஎஸ் ஆக முயற்சி செய் என்று கூறி சந்தியாவின் பையில், விவகாரத்து நோட்டீஸ் பத்திரத்தை அவளுக்கு தெரியாமல் வைக்கிறாள்.
அதை வீட்டில் வந்து வைத்திருந்தபோது, சரவணன் கைக்கு கிடைத்து விடுகிறது. அது என்ன பத்திரம் என்று தெரியாமல் இருக்கிறான். அப்போதுதான், சந்தியாவுக்கு அவளுடைய தோழி போன் செய்து தான், விவாகரத்து பத்திரத்தை சந்தியாவின் ஹேண்ட் பேக்கில் வைத்திருந்ததாக சொல்கிறாள். இதைக்கேட்ட, சரவணன், தன்னை சந்தியா விவாகரத்து செய்ய நினைக்கிறார். அதனால்தான், விவாகரத்து பத்திரம் வைத்திருக்கிறார் என்று தவறாக நினைத்துக்கொள்கிறான். ஆனால், சந்தியா சரவணனை மிகவும் நேசிக்கிறாள். அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறாள். பல இடங்களில் சந்தியா படித்தவள் அறிவானவள் என்பதையும் அவளுடைய லட்சியத்தை அடைய அவள் தன்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் சரவணனுக்கு ஏற்படுகிறது. ஆனால், சரவணன், சந்தியாவிடம் உங்களுக்கு விவாகரத்து வேண்டுமா என்று நேரடியாக கேட்க தயங்குகிறான். சந்தியாவும் உங்கள் மனதில் இருக்கிற பிரச்னை என்ன என்று கேட்டும் அவன் பிடிகொடுக்க மறுக்கிறான். அதனால்,
இந்த சூழலில்தான், சந்தியாவைப் பற்றி ஹீரோ சரவணன் மனதில் இருக்கும் தவறான புரிதல் எப்போது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஒரு முடிவை அறிவிக்கும் விதமாக, இந்த வாரம் ராஜா ராணி 2 சீரியல் புரமோ வெளியாகி உள்ளது.
வீட்டில் யோசனையில் இருக்கும் சரவணனிடம் சந்தியா என்ன பலமான யோசனையில் இருப்பது போல தெரிகிறது என்று கேட்கிறாள். அதற்கு, சந்தியா, இருங்க கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு தனது ஹேண்ட் பேக்கில் இருந்து விவாகரத்து பத்திரம் கீழே விழுகிறது. அதை எடுத்துப் பார்க்கும் சரவணன் என்ன இது என்று கேட்கிறான். சந்தியா, அதிர்ச்சி அடைகிறாள். சந்தியா அது ஒன்னும் இல்லைங்க என்று கூறுகிறாள். அதற்கு சரவணன், இப்ப நீங்க சொல்றீங்களா இல்லை. பார்வதியைக் கூப்பிட்டு எல்லோர் முன்னாடியும் படிக்க சொல்லட்டுமா என்று கேட்கிறான். சந்தியா வேறு வழியில்லாமல் இது டிவோர்ஸ் பேப்பர் என்று கூறுகிறாள். இதுதான் சமயம் என்று சரவணன் உடனடியாக, உங்களுக்கு விவாகரத்துதானே வேண்டும் முதலில் பார்வதி நிச்சயதார்த்தம் முடியட்டும் அதற்கு பிறகு பேசிப்போம் என்று கூறிவிட்டு சந்தியா கையில் அந்த விவாகரத்து பத்திரத்தை கொடுத்துவிட்டு சந்தியா என்ன சொல்கிறாள் என்றுகூட கேட்காமல் அங்கிருந்து செல்கிறான். இப்படி நீண்ட நாட்களாக சந்தியா சரவணன் இடையே ஜவ்வாக இழுந்து வந்த இந்த பிரச்னை ஒருமுடிவுக்கு வருவதாக தெரிகிறது.
இந்த புரமோவைப் பார்த்த ரசிகர்கள், சந்தியா தனக்கு தேவையில்லாத டிவோர்ஸ் பேப்பரை எங்கேயாவது தூக்கி எறியாமல் அதை ஏன் தனது ஹேண்ட் பேக்கில் வைத்திருந்தார். இப்போது பாருங்கள் அது சரவணனிடம் மாட்டிக்கொண்டது. பாவம் சந்தியா… விரும்பாத டைவர்ஸ் நோட்டீஸை எதற்கு ஹேண்ட் பேக்கில் வச்சிருந்தாங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“