'கொஞ்ச ஆட்டமா ஆடுன...' வில்லி கன்னத்தில் விழுந்த அறை: ராஜா ராணி 2 அடுத்த ட்விஸ்ட்!
Vijay TV Raja rani 2 serial shooting spot video senthil slaps archana: வில்லி அர்ச்சனா கன்னத்தில் அறைந்த செந்தில்; விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் வைரல் வீடியோ...
ராஜா ராணி 2 சீரியலில் வில்லி அறை வாங்கும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராஜா ராணி சீசன் 1ல் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆல்யா மானசா இந்த இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். ஆல்யாவின் கணவர் சரவணனாக சித்து நடித்து வருகிறார்.
தற்போது சீரியல், பார்வதியின் திருமணம் குறித்த பிரச்சனைகள் தொடர்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. பார்வதியை காதலிப்பதாக கூறி, தனியே அழைத்துச் சென்று தவறாக நடக்க முயல்கிறான் விக்கி. அவனிடமிருந்து, சந்தியாவும் சரவணனும் பார்வதியை காப்பாற்றுகின்றனர்.
அதன்பின், பார்வதி, தன்னை விரும்பும் பாஸ்கருக்கு பச்சைக் கொடி காட்ட, பாஸ்கர் குடும்பத்துடன் பெண் கேட்டு வருகிறான். இதனால் சிவகாமி கடும் கோபமடைகிறார். அவர் பார்வதியின் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில், சீரியலில் செந்தில் கேரக்டரில் நடித்து வரும் பாலாஜி தியாகராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், அதில் அவர் மனைவி அர்ச்சனாவை கோபத்துடன் கன்னத்தில் அறைகிறார். பின்னர் என்ன தைரியம் இருந்த என் தங்கச்சிக்கு இப்படி ஒரு காரியம் பண்ணுவ? என திட்டுகிறார். அருகில் நிற்கும் சந்தியா செந்திலை தடுக்க பார்க்கிறார். ஆனால், செந்தில், கொஞ்ச நெஞ்ச பேச்சா பேசுன என்றும் கண்டிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.