Advertisment
Presenting Partner
Desktop GIF

Tamil Serial news: இவ்வளவு அன்பை மனசுல வச்சிருக்கீங்களா அசந்துபோன ஆல்யா மானசா!

இப்படி அன்புடன் இருந்தால் யாருக்குதான் பிடிக்காது என்று சரவணன் முகத்தில் மீசையை முறுக்கி விடுகிறாள் சந்தியா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay tv, vijay tv serial, raja rani 2 serial, raja rani 2 serial today episode, raja rani 2 serial story, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், சந்தியா, ஆல்யா மானசா, சரவணன், சித்து, alya manasa, sandhya, sidhu, saravanan, sundaram, tamil tv serial news, tamil serial raja rani 2 story

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் இன்று நடைபெறும் கதையை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயினாக ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசா ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக சித்து நடிக்கிறார்.

ராஜா ராணி 2 இன்றைய சீரியலில், வீட்டில் இரவு நேரத்தில் அனைவரும் உணவு மேசையில் சாப்பிட அமர்கிறார்கள். அப்போது சிவகாமி, இன்றைக்கு என்ன செய்திருக்கிறாய் என்று அர்ச்சனாவிடம் கேட்கிறார். அதற்கு அர்ச்சனா, தடுமாற்றத்துடன் இன்றைக்கு சாம்பார் செய்திருப்பதாகக் கூறுகிறாள். ஆனால், வேலை இருந்ததால் கடைக்கு போயிருந்தேன். அதனால், சந்தியாதான் சாம்பார் செய்தால் என்று சொல்கிறாள். சந்தியாவும் ஆமாம் நான்தான் சாம்பார் செய்தேன் என்று கூறுகிறாள். சந்தியாதான் சாம்பார் செய்தால் என்றதுமே சிவகாமியின் முகம் மாறுகிறது. ஏனென்றால், சந்தியாவுக்கு சமையல் செய்யத் தெரியாது என்பதால் எப்படி வைத்திருக்கிறாளோ என்று அதிருப்தி அடைகிறார்கள்.

சந்தியா அனைவருக்கும் சாப்பாடு பரிமாறுகிறாள். பின்னர், சாம்பார் ஊற்றுகிறாள். முதலில் சாப்பிடும் சந்தியாவின் மாமனார் சுந்தரம், சாம்பார் நன்றாக இல்லை என்பதை உணர்கிறார். அதை, வெளியே சொல்லாமல் சாம்பார் நல்லாதான் இருக்குதுமா ஆனால், என்னவோ ஒன்று குறைகிறது என்று கூறுகிறார். அங்கே சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பார்வதி, சாம்பார் நல்லாவே இல்லை. வாயிலயே வைக்க முடியல என்று கூறுகிறாள். சிவகாமி, சமையல் செய்யத் தெரியலனா நீ ஏன் செய்யற என்று சந்தியாவை திட்டுகிறாள். அதோடு, என்ன வேலை இருந்தாலும், இனிமேல் 3 வேலையும் அர்ச்சனாதான் சமையல் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

publive-image

அப்போது, சிவகாமி அந்த அதிகாரியை போய் பார்த்தயே என்ன ஆச்சு சரவணா என்று கேட்கிறார். அதற்கு சரவணன், அந்த அதிகாரி பயங்கர கோபத்தில இருக்காரும்மா என்று கூறுகிறான். அதற்கு சிவகாமி, பின்ன அவ்வளவு பெரிய அதிகாரியை அசிங்கப்படுத்துனா என்ன பண்ணுவான், இது எங்க போய் இழுத்துக்கொண்டு விடப் போகிறதோ என்று சொல்கிறார். இதைக் கேட்டு சந்தியா வருத்தப்படுகிறாள். அப்போது, சுந்தரம் உடனடியாக தலையிட்டு, சாப்பிடும்போது இந்த பிரச்னையை யாரு ஆரம்பிச்சது. சாப்பிடும்போது நிம்மதியாக சாப்பிட வேண்டாமா என்று கேட்டு அடக்குகிறார்.

சாம்பார் எப்படி இருக்கிறது என்று சரவணனிடம் கேட்கும்போது நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சாப்பிடுகிறான். இதைக் கேட்டு சந்தியா சந்தோஷம் அடைகிறாள். அப்போது, பார்வதி இதையெல்லாம் என்னால சாப்பிட முடியாது என்று சொல்லிவிட்டு சாப்பாட்டு மேசையில் இருந்து எழுகிறாள். அப்போது, சிவகாமி, பார்வதியிடம் வீட்டில் 3 ஆம்பளை பசங்களும் சாப்பிடறானுங்க உனக்கு என்னடி, இப்படி இருந்தால் நாளைக்கு நீ போற இடத்தில் என்ன இப்படி வளர்த்திருக்காங்க என்று என்னைதான் திட்டுவார்கள். சாப்பிடு. உனக்கு மாப்பிள்ளை வேற பார்த்துக்கிட்டு இருக்கிறோம். இன்னும் கொஞ்சநாள்ள கல்யாணம் பண்ணனும் என்று கூறுகிறார். இதைக் கேட்டு பார்வதி என்னது எனக்கு கல்யாணமா என்று ஷாக் ஆகிறாள். அதற்கு சிவகாமி, ஆமாம், சரியா அமைந்தால் கல்யாணம் பண்ண வேண்டியது தானே என்று சொல்கிறார்.

பிறகு ஊறுகாய் எடுத்துக்கொண்டு வந்து எல்லோரும் சாப்பிடுகிறார்கள். எல்லோரும் சாப்பிட்ட பிறகு, அர்ச்சனமாவும் சந்தியாவும் சாப்பிடுகிறாள். அப்போது, அர்ச்சனா, சந்தியாவிடம் உன்னை ஒரு நாள் சமைக்க சொன்னதுக்கு என்னை பட்டினி போட்டுட்ட, இதை மனுஷன் சாப்பிடுவானா என்று கூறிவிட்டு எழுந்து செல்கிறாள்.

சாப்பாட்டு மேசையில் சந்தியா சாப்பிடுவதற்கு தனியாக அமர்ந்திருக்கிறாள். அப்போது அங்கே வரும் மாமனார் சுந்தரம், சந்தியாவுக்கு சமைக்க தெரியாது என்றாலும் முயற்சி செய்கிறாய், முதல்முறையாக சமைக்கும்போது அப்படிதாம்மா இருக்கும். போகப் போக சரியாகிவிடும் என்று கூறுகிறார். பிறகு, சரவணனுக்கும் உனக்கும் என்னம்மா பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு, சந்தியா எந்த பிரச்னையும் இல்லை என்று கூறுகிறாள். எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தால் சந்தோஷம்மா, சரவணன் எல்லாத்தையும் மனசிலயே வச்சுகிட்டு இருப்பான். என்னனு கேட்டு பிரச்னையை சரி பண்ணுமா இல்லை நான் கேட்கிறேன் என்று கூறுகிறார். சரி மாமா சீக்கிரம் சரி பண்ணிடறேன் என்று சந்தியா கூறுகிறாள்.

சாப்பிட்டு முடித்த பிறகு, சிவகாமி வாசல் திண்ணையில் வெளியே வந்து அமர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது, சுந்தரமும் வெளியே வந்து அமர்கிறார். அவரிடம் சிவகாமி, என்ன மருமகளை பாசமா சாப்பிட வச்சுட்டு வந்தீங்களா என்று கேட்கிறார். அதற்கு, சுந்தரம், நீ எப்போதும அந்த பொண்ணை கடுகடுனு பேசிகிட்டு இருந்தால் எப்படி? அந்த பொண்ணுக்கு அப்பா அம்மா யாரும் இல்லை. நாம திட்டினால் அந்த பொண்ணு மனசில உள்ள வருத்தத்தை யாருகிட்ட போய் சொல்லும் என்று கேட்கிறார். சந்தியா அப்போது, என்ன பேசுகிறார்கள் என்று கதவோரம் நின்று கேட்கிறாள்.

சிவகாமி, சுந்தரம் சொன்னதை அதை ஆமோதித்தவளாக, இல்லைங்க, சரவணன் முகமே வாடிப்போச்சு, அவன் இந்த குடும்பத்துக்காக எல்லா பிரச்னையும் மனசுல போட்டு வச்சுக்குவான். அவனை அப்படி பார்க்கும்போது மனசு எல்லாம் பதறுது என்று கூறுகிறாள். அப்போது, சிவகாமி தான் திருமணம் செய்துகொண்டு வந்த புதிதில் சுந்தரத்துக்கு தன்னை புடிக்குமா என்று தெரியாமல் இருந்தேன். அதை உங்ககிட்ட கேட்கிறதுக்கு பயம். அப்போ வேற கூட்டுக்குடும்பமா இருந்தோம். கல்யாணம் பண்ணிகிட்டு புதுசா ஒரு இடத்துக்கு வந்ததால் கண்ணை கட்டி காட்டில் விட்டமாதிரி இருக்கும். உங்க அம்மா வேற என்ன விரட்டிகிட்டே இருப்பாங்க. அப்போ உங்களுக்கு என்னை பிடிக்குமா பிடிக்காதா என்று தெரிந்து கொண்டது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போணபோதுதான் என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை தெரிந்துகொண்டேன். என்னை நீங்க அப்படி பார்த்துக்கிட்டிங்க. இன்னும் 2-3 நாளைக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தால்கூட நன்றாக இருக்கும் என்பது போல இருந்தது என்று கூறுகிறார்.

சிவகாமி சொன்னதை கதவு ஓரமாக இருந்து கேட்டுக்கொண்டிருந்த சந்தியா, தனக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனால், சரவணனுக்கு தன் மீது அன்பு இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம் என்று யோசிக்கிறாள். பெட்ரூமுக்கு சென்று தனக்கு குளிர் காய்ச்சல் அடிப்பதாக சொல்லி குளிரில் நடுங்குவது போல நடிக்கிறாள். சரவணன், சந்தியா குளிரில் நடுங்குவதைப் பார்த்துவிட்டு தலையில் கை வைத்து பார்த்துவிட்டு என்ன என்று கேட்கிறான். அவள் உள்காய்ச்சல் குளிர் தாங்க முடியவில்லை என்று கூறுகிறான். பிறகு ஒரு போர்வையை எடுத்து போர்த்திவிட்டு வெளியே செல்கிறான்.

publive-image

சரவணன், வெளியே போனதால் சந்தியா ஏமாற்றமடைகிறாள். எனக்கு உடம்பு சரியில்லை என்று சரவணன் பதறிப்போவார் என்று பார்த்தால் இப்படி வெளியே போய்விட்டாரே என்று வருத்தப்படுகிறாள். ஆனால், சரவணன், ஆவி பிடிப்பதற்காக தண்ணீர் காயவைத்து சுடு தண்ணீர் எடுத்துக்கொண்டு வருகிறான். இதைப் பார்த்ததும் சந்தோஷம் அடையும் சந்தியா, மீண்டும் படுக்கைக்கு சென்று படுத்துக்கொள்கிறாள்.

அப்போது, சரவணன், டைவேஸ் வாங்கப் போறவங்க இன்னும் கொஞ்ச நாளில் இங்கிருந்து போகப் போறவங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போயிடுச்சே என்று நினைத்துக்கொள்கிறான். சந்தியாவை எழுப்பி ஆவி பிடிக்க வைக்கிறான். சந்தியா போதும் போதும் என்றாலும் விடாமல் ஆவி பிடிக்க வைக்கிறான். சந்தியா அவனுடைய கைகளைப் பற்றிகொள்கிறாள். சந்தியா போதும் நல்லா ஆயிடுச்சு என்று தூங்கப் போகிறாள்.

publive-image

சரவணனும் தரையில் பாயை விரித்து படுத்துக்கொள்கிறான். சரவணன்ன் தூங்கிற பிறகு, சந்தியா எழுந்து சரவணனை அன்புடன் பார்க்கிறாள். பிறகு, இப்படி அன்புடன் இருந்தால் யாருக்குதான் பிடிக்காது, என்று அவன் முகத்தில் மீசையை முறுக்கி விடுகிறாள். குட்டி கண்ணு, முறுக்கிய மீசை என்று ரசிக்கிறாள். இவ்வளவு அன்பை மனசுல வச்சிருக்கீங்களா என்று அசந்து போகிறாள். தரையில் படுத்திருக்கும் சரவணனை கட்டிலில் இருந்து தொட்டு பார்த்துகொண்டிருந்த சந்தியா விழுகிறது போல பிடி நழுவுகிறது. நல்ல வேளையாக அவள் விழாமல் சுதாரித்துக்கொள்கிறாள். பின்னர், அவனுடைய மீசையை இழுத்து பார்த்து கொஞ்சும்போது சரவணன் எழுந்துகொள்கிறான். சரவணன் கண் திறந்து பார்ப்பதற்கு முன் சந்தியா வேகமாக போர்வையை போர்த்திக்கொண்டு தூங்குகிறாள். சரவணன் எழுந்து சந்தியா தூங்குவதைப் பார்த்துவிட்டு மீண்டும் தூங்குகிறான். சரவணன் தூங்கியதும் சந்தியா எழுந்து சரவணனை அன்புடனும் காதலுடனும் பார்க்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Raja Rani 2 Vijay Tv Raja Rani Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment