VijayTV serial: பார்வதி திருமணத்துக்கு கிரீன் சிக்னல்; சந்தியாவை சீக்கிரம் அனுப்ப நினைக்கும் சரவணன்!

சிவகாமி முதலில் கோபமாக பேசினாலும் சரவணன் சொன்ன பிறகு, பார்வதி – பாஸ்கர் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். சுந்தரத்திடம், ஆனால், உங்க அம்மா கிட்ட நீங்கதான் பேசனும் என்று கூறுகிறார். சுந்தரமும் நான் பேசிக்கிறேன் விடு என்று கூறுகிறார்.

Vijay TV, Raja Rani 2 Serial, Raja Rani 2 Serial today episode, Sivagami green signals to Parvathy marriage, Saravanan thinks to give devorce to Sandhya, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், பார்வதி திருமணத்துக்கு சிவகாமி கிரீன் சிக்னல், சந்தியாவுக்கு விவாகரத்து கொடுக்க நினைக்கும் சரவணன், Sandhya, Alya Manasa, Sidhu, Praveena, Vaishnavi Sundar, raja rani 2

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் விருவிருப்பான திருப்பங்களை அடைந்து வருகிறது. அதே நேரத்தில் குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள அன்பு, பாசம், நெகிழ்ச்சி, முரண், சண்டை எல்லாவற்றையும் ரசிகர்களுக்கு நெருக்கமாக காட்டி வருகிறது. இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடில் சரவணன் ஸ்வீட் கடையில் வியாபாரம் பார்த்துக்கொண்டிருக்கிறான். அப்போது கடையில் வேலை செய்கிற சர்க்கரை நெற்றி நிறைய திருநீர் வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து என்னடா இவ்வளவு திருநீர் என்று கேட்கிறான். அதற்கு சர்க்கரை, நேற்று நீங்க கோயிலுக்கு போனீங்க இல்ல, சந்தியா அண்ணி வந்து கொடுத்துட்டு போனாங்க, அதான் மொத்தமா வச்சுகிட்டேன் என்று கூறுகிறான். அப்போது, சரவணன், சந்தியாவுடன் கோயிலுக்கு போயிருந்தபோது, உங்க மனசுல என்ன இருக்கு சொல்லுங்க, உங்க தோள் மேல கையை போடகூட எனக்கு உரிமை இல்லையா, ஆரம்பத்துல நீங்க என் பக்கத்தில வந்த அப்போ நான் பயங்கரமா கத்தினேன். திட்டினேன். அதற்காக இப்ப என்னை பழிவாங்கறீங்களா என்று கேட்டதை நினைத்துப் பார்க்கிறான். அதோடு, பார்வதி ஆசைப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், அவங்களை வீட்டை விட்டு அனுப்புவதற்கான வேளைகளைப் பார்க்க வேண்டும் என்று மனதுகுள்ள சொல்லிக்கொள்கிறான். அந்த நேரம் பார்த்து, கடைக்கு வரும் சரவணனின் தங்கை பார்வதி தயக்கத்துடன் தனியாக பேச வேண்டும் என்று சொல்கிறாள். கடையில் கஸ்டமர்கள் வந்துகொண்டிருந்ததால் சர்க்கரையை கடையைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தனியாக சென்று பேசுகிறார்கள்.

பார்வதி, தான் விக்கி இப்படி மோசமாக நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறாள். அதற்கு சரவணன், அதுதான் முடிஞ்சு போச்சேமா, அந்த விக்கிகிட்ட இருந்து நீ தப்பிச்சிட்ட, இப்ப என்ன சொல்லுமா என்று கேட்கிறான். அதற்கு பார்வதி, 2 மாசத்துக்கு முன்னாடி தன்னை பாஸ்கர் பொண்ணு பாக்க வந்தாங்க என்று சொல்கிறாள். இதைக் கேட்டு ஷாக் ஆகும், சரவணன், இது எப்ப நடந்தது பாஸ்கர் யார் என்று கேட்கிறான். அதற்கு பார்வதி நீங்க எல்லோரும் ஊருக்கு போயிருந்தபோது, பாஸ்கர் வீட்ல பொண்ணு பார்க்க வந்தாங்க, ஆனால், என்னை பொண்ணு பார்க்க வரல, அர்ச்சனா அண்ணியோட தங்கச்சி பிரியாவைத்தான் பொண்ணு பார்க்க வந்தாங்க. அவங்க வீடு சரி இல்லைங்கறதால் நம்ம வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காங்க, அர்ச்சனா அண்ணி, மயில், என்னை, ஆதி எல்லோரையும் வீட்டை விட்டு அனுப்பிட்டு வர வச்சிருந்தாங்க… நான் ஏதேச்சையா வந்துட்டதால இது எனக்கு தெரிஞ்சிடுச்சு… இது அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்கனு அர்ச்சனா அண்ணி எங்கிட்ட கெஞ்சி கேட்டுக்கிட்டதால நானும் சொல்லல. ஆனால், அப்போ என்ன பார்த்த பாஸ்கர் என்னை ரொம்ப புடிச்சிருக்குனு சொன்னார். நான் வேண்டாம்னு திட்டி பார்த்தேன். என்னென்னமோ பண்ணி பார்த்தேன். ஆனால், அவர் விடாமல் என் பின்னாலயே சுத்திகிட்டு இருந்தாரு. இது அர்ச்சனா அண்ணிக்குகூட தெரியும். அர்ச்சனா அண்ணியும் அவங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி பாஸ்கர் கிட்ட என்னென்னமோ சொல்லிப் பார்த்தாங்க, ஆனால், அவரு மாறாம என்னைத்தான் கட்டிக்குவேன்னு உறுதியா இருந்தார். அவரை ஆரம்பத்துல ரொம்ப தொந்தரவா நினைச்சா நான், அவருடைய எதிர்பார்ப்பு இல்லாத அன்பை லேட்டாதான் புரிஞ்சுகிட்டேன்.

வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரச்சொல்லி நான் சொல்லல. அவங்களேதான் வந்திருக்காங்க, எனக்கு அவரை ரொம்ப புடிச்சிருக்கு, நீங்கதான் அம்மாகிட்ட பேசனும்” என்று கூறுகிறாள்.

இதைக்கேட்ட சரவணன், பார்வதியிடம், விக்கி அப்படி நடந்துகிட்டதால அவனோட பாஸ்கரை ஒப்பிட்டு புடிச்சிருக்குனு சொன்னா அது தப்பு. நல்லா யோசிச்சு சொல்லு. உனக்கு பாஸ்கரை புடிச்சிருக்கா என்று கேட்கிறான். பார்வதியும் புடிச்சிருக்கிறது. பாட்டி வேற ஊர்ல இருந்து மாப்பிள்ளை பார்த்து இருப்பதாக சொல்லியிருக்காங்க என்று கூறுகிறாள். சரவணனும் சரி விடு இதைப் பத்தி அம்மாகிட்ட பேசுகிறேன் என்று சொல்லி அனுப்புகிறாள்.

அடுத்த காட்சியில், அர்ச்சனாவும் செந்திலும் பாஸ்கர் வீட்டுக்கு போகிறார்கள். அர்ச்சனா, எப்படியாவது, அவர்களிடம் பேசி பாஸ்கரை தன் தங்கச்சிக்கு கட்டி வைக்க வேண்டும் என்ற முடிவுடன் அங்கே போகிறாள். பாஸ்கர் அப்பா அம்மா இருவரும் அர்ச்சனாவையும் செந்திலையும் வரவேற்கிறார்கள். அர்ச்சனா அவர்களிடம், பாஸ்கர் வந்து பொண்ணு பார்த்துட்டு போனதில் இருந்து அவளுக்கு ரொம்ப புடிச்சு போச்சு, உங்களை ரொம்ப நல்லா பாத்துக்குவா, வீட்ல எல்லோருக்கும் புடிச்சிருக்கு என்று சொல்கிறார்கள். ஆனால், பாஸ்கரின் அப்பா அம்மா அர்ச்சனா, நாத்தனார் பார்வதியைப் பற்றித்தான் சொல்கிறாள் என்று நினைத்து. உங்களுக்கு நல்ல மனசுங்க, உங்க தங்கச்சியை பொண்ணு பார்க்க வந்திருந்தாலும், பிறகு உங்க நாத்தானாரை புடிச்சிருக்குனு பொண்ணு பார்க்க வந்திருக்கோம்னு தெரிஞ்சும் நீங்க வீடு தேடி வந்து பேசுறீங்கனா, ரொம்ப நல்ல மனசுங்க. இந்த மாதிரி நல்ல குடும்பத்துல சம்மந்தம் பண்றதுல சந்தோஷம், நீங்க வீட்ல கலந்து பேசி எப்போனு சொல்லுங்க பார்வதியை கல்யாணம் பண்ண நாங்க தயாரா இருக்கிறோம் என்று பாஸ்கருடைய அப்பா சொல்கிறார். இதைக் கேட்ட அர்ச்சனா, இல்லைங்க நான் என்ன சொல்ல வர்றேன்னா என்று சொல்லும்போது, இடையில் குறுக்கிட்டு அவளை பேசாமல் நிறுத்திவிட்டு, எங்களுக்கு சம்மதம்ங்க வீட்டுக்கு போய் பேசிவிட்டு போன் பண்றேன் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான்.

வெளியே வந்த பிறகு, அர்ச்சனா ஏன் அப்படி பேசினீங்க, என்று கேட்கிறாள். அவங்க உன்ன ரொம்ப நல்லவனு நினைக்கிறாங்க, நீயே உன்னை அசிங்கப்படுத்திக்காத என்று சொல்லி வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருகிறான்.

அடுத்த காட்சியில், வீட்டில் அனைவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். தாமதமாக வரும் சரவணனும் வந்து சாப்பிட அமர்கிறான். அப்போது சிவகாமியிடம், சரவணன், பார்வதி – பாஸ்கர் திருமணம் பற்றி பேசுகிறான். சிவகாமி முதலில் கோபமாக பேசினாலும் சரவணன் சொன்ன பிறகு, பார்வதி – பாஸ்கர் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். சுந்தரத்திடம், ஆனால், உங்க அம்மா கிட்ட நீங்கதான் பேசனும் என்று கூறுகிறார். சுந்தரமும் நான் பேசிக்கிறேன் விடு என்று கூறுகிறார்.

சிவகாமி, சம்மதம் தெரிவித்துவிட்டதால் அர்ச்சனா, புகைச்சல் அடைகிறாள். என் தங்கச்சிக்கு பாஸ்கரை கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பார்த்தால் பார்வதிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா, இந்த கல்யாணத்தை நடக்க விடமாட்டேன். எப்படியாவது எதாவது பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்துறேன் பாருங்க என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள்.

சிவகாமி சரியென்றதும், சரவணன் மாப்பிள்ளைவிட்டுக்கு போன் செய்து எல்லோருக்கும் பிடிசிருக்கிறது. நாளைக்கு நாள் நல்லா இருந்தா வர சொல்கிறான். பாஸ்கர் அப்பாவும் நாளை நாள் நல்லா இருக்குது. நாளைக்கே நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். இதைகேட்டு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோஷம் அடைகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv raja rani 2 serial today episode sivagami green signals to parvathy marriage

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com