Advertisment
Presenting Partner
Desktop GIF

Vijay TV Serial: அஞ்சறைப் பெட்டி கேட்டால் டிரங்க் பெட்டி எடுத்து வரும் சந்தியா!

சந்தியா அஞ்சறைப் பெட்டியை திறந்து பார்த்துவிட்டு, அஞ்சறை இருக்கும்னு சொன்னீங்க இதிலென்ன 7 அறை இருக்கு என்று கேட்கிறாள். இதைக் கேட்டு கடுப்பாகும் சரவணன் கோபமாக பார்க்கிறான்.

author-image
WebDesk
New Update
Vijay TV, vijay tv serial, Raja Rani 2 seial, raja rani 2 serial today episode, saravanan trains sandhya to making sweets, ராஜா ராணி 2, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், சித்து, ஆல்யா மானசா, சந்தியாவுக்கு சமையல் கற்றுக்கொடுக்கும் சரவணன், சந்தியாவுக்கு ஸ்வீட் செய்ய கற்றுக்கொடுக்கும் சரவணன், sidhu trains alya manasan for cooking, tamil tv serial news, raja rani 2 serial today story, sivagami, sundaram, parvathy, archana, alya manasa performance in raja rani 2

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ஓவ்வொரு நாளும் புதிய திருப்பங்களையும் விறுவிருப்பான கட்டங்களையும் அடைந்து வருகிறது. அதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், செந்தில் துணிக்கடையில் வியாபாரம் பார்த்துக்கொண்டிருக்கிறான். அப்போது கடைக்கு அவனுடைய மனைவி அர்ச்சனா, வியாபாரம் எப்படி நல்லா போய்க்கொண்டிருக்கிறதா என்று விசாரிக்கிறாள். பிறகு, இருவரும், வீட்டில் சந்தியா அந்த லஞ்சம் கேட்ட நகராட்சி அதிகாரியை உயர் அதிகாரிகளிடம் பிடித்து கொடுத்ததைப் பற்றி பேசுகிறார்கல். சந்தியாவை வீட்டில் உள்ள எல்லோரும் கொண்டாடியதை அர்ச்சனாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறுகிறாள். போதாததற்கு இப்போது சந்தியா வேற சமையல் போட்டியில் வேறு கலந்துகொள்கிறாள். சந்தியாவுக்கு சமைக்க தெரியாது என்பதால் அவள் ஜெயக்கமாட்டாள் என்று செந்தில் கூறுகிறான். அதற்கு அர்ச்சனா, சந்தியாவுக்கு அவளுடைய கணவன் சரவணன் சமைக்க கற்றுத் தருகிறான் என்பதால் அப்படி சொல்ல முடியாது என்று சொல்கிறாள். எப்படியாக இருந்தாலும், சந்தியா இந்த சமையல் போட்டியில் ஜெயிக்க கூடாது என்று கூறுகிறாள்.

இதையடுத்து அர்ச்சனா, தனது தங்கையை பெண் பார்த்துவிட்டு சென்ற மாப்பிள்ளையின் புகைப்படத்தை தேடி எடுக்கிறாள். இந்த பையனை என் தங்கச்சிக்கு கட்டி வைத்துவிட்டால் நாம பெரிய கடையாக வைத்துவிடலாம் என்று செந்திலிடம் கூறுகிறாள். அதற்கு நான் சொல்றதைக் கேளுங்க என்று கூறுகிறாள். செந்திலும் பிரச்னை இல்லாமல் இருந்தால் சரி என்று கூறுகிறான்.

அடுத்த காட்சியில், வீட்டில், சுந்தரம், சிவகாமி, மயில், செந்தில், அர்ச்சனா, பார்வதி எல்லோரும் கூடத்தில் இருக்கிறார்கள். சந்தியா சமையல் போட்டியில் கலந்துகொள்வதாக சொல்லியிருப்பதால், சமையல் கற்றுத் தருவதாக சொன்ன சரவணன் ஏன் இன்னும் வரவில்லை என்று வாசலைப் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறாள். அப்போது, சந்தியாவுக்கு சமையல் கற்றுத் தந்தால் மட்டும் ஜெயித்துவிடுவாங்களா? அவங்களுக்கு ஸ்வீட்னா என்னனே தெரியாது என்று கிண்டலாக மட்டம் தட்டி பேசுகிறாள். அதற்கு சுந்தரம், அமைதியாக இரு என்று கூறுகிறார்.

இரவு நேரம் ஆகியும் சரவணன் இன்னும் ஏன் வரவில்லை என்று சந்தியா கவலைப் படுகிறாள். வேலைக்காரி மயில், சரவணன் ஐயா சீக்கிரம் வந்துவிடுவார். கடையில் வியாபாரம் இருந்தாலும் சந்தியாவுக்காக வந்துவிடுவார் என்று கூறுகிறாள்.

ஒரு கட்டத்தில் சுந்தரம், தனது இரண்டாவது மகன் செந்திலிடம் ஒரு எட்டு போய் சரவணனனை கூட்டிக்கொண்டு வந்துவிடு என்று கூறுகிறார். ஆனால், சிவகாமி, அதெல்லாம் வேண்டாம், வியாபாரம் முடியற நேரம்தான், வருவான் வருவான், வராமா எங்க போயிடப்போறான் போங்க என்று சொல்கிறார்.

இதையடுத்து, எனக்கு தூக்கம் வருக்கிறது வாங்க என்று சொல்லி அர்ச்சனாவும் தனது கணவன் செந்திலை அழைத்துக்கொண்டு உள்ளே செல்கிறாள்.

சிறிது நேரத்திலேயே, சரவணன் வீட்டுக்கு வருகிறான். சந்தியா சரவணனிடம் சென்று ஏன் இவ்வளவு லேட் ஆகிடுச்சு உங்களுக்காக காத்திருக்கிறேன் என்று கூறுகிறாள். சரவணன் ஏன் என்று கேட்கிறான். அதற்கு சந்தியா நீங்க தானே எனக்கு சமையல் கற்றுத் தருகிறேன் என்று சொன்னீங்க என்று கூறுகிறாள். சரவணன், “ஆமாம், மறந்துபோச்சு” என்று கூறுகிறான். சரி வாங்க சமையல் கற்றுத் தாங்க என்று சந்தியா அவனை சமையலறைக்கு அழைத்து செல்கிறாள்.

இதற்கு அடுத்து, சுந்தரம் தனியாக அமர்ந்துகொண்டிருக்கிறார். அப்போது அவருடைய மகள் பார்வதி வந்து தனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம், படிக்கப்போவதாகக் கூறுகிறாள். உடனடியாகவா கல்யாணம் பண்ணப் போறாங்க அது நாலு அஞ்சு மாசம் ஆகும். உனக்கு கல்யாணம் பண்ணுவது என்பது உங்க அம்மா எடுத்த முடிவு என்று கூறுகிறார். அந்த நேரம் பார்த்து அங்கே வரும் சிவகாமி, “பொய், பொய் சொல்றீங்க… இது ஊர்ல இருக்கிற உங்க அம்மா எடுத்த முடிவு… உன் பாட்டி எடுத்த முடிவு” என்று கூறுகிறார். அப்போது, பார்வதி, நான் என்ன கல்யாணமே வேண்டாம்னா சொல்றேன். படிப்பு முடிகிற வரைக்கும் இன்னும் கொஞ்சம் நாளைக்கு கல்யாணம் வேண்டாம்மா. என்று கூறுகிறாள்.

இப்ப என்ன கல்யாணம் பன்றதா இருந்தால் உடனேவா பண்ணப் போறாங்க, அவங்க வந்து பொண்ணு பார்க்கனும், நாம போய் மாப்பிள்ளை வீட்டை பார்க்கனும், அதற்கு பிறகு பெயர் பொருத்தம், ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்து கல்யாணம் நடப்பதற்கு 4-5 மாசம் ஆகிவிடும் என்று கூறுகிறாள். அதற்கு இப்போ பார்த்தால்தான் சரியாக இருக்கும், அந்த நேரம் திடீர்னு போய் மாப்பிள்ளை எப்படி பார்க்க முடியும் என்று கூறுகிறார். அதற்கு சுந்தரம், சரவணனுக்கு 15 நாள்ல பொண்ணு பார்த்து கட்டி வச்சயே என்று கூறுகிறார். அதைக் கேட்டு கோபமாகும் சிவகாமி, அதை ஞாபகப்படுத்தாதீங்க, நம்ம குடும்பத்துல அதனால ஏற்பட்ட பாதிப்பு இன்னும் இருந்துகிட்டு இருக்கு என்று கூறுகிறார்.

பார்வதி, தனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம் படிப்பு முடிந்தவுடன் பண்ணிக்கிறேன் என்று சொல்கிறாள். இதற்கு சிவகாமி, “அப்படினா, நீயும் உங்க அப்பாவும் சந்தியாகிட்ட போய் இன்னும் கொஞ்ச நாளைக்கு பார்வதி படிப்பு முடிக்கிற வரைக்கும் கல்யாணம் வேண்டாம்னு ஊர்ல இருக்கிற உங்க பாட்டிகிட்ட சொல்லச் சொல்லு, அவங்களுக்கு என்னையவிட சந்தியாவைத்தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறுகிறார்.

அதற்கு பார்வதி, அப்படினா உடனடியாக சந்தியா அண்ணிகிட்ட போய் பேசுகிறேன் என்று கூறுகிறாள். சந்தியாவை எந்த விஷயத்திலும் சண்டைக்காரி போல பார்க்கும் பார்வதி, இந்த விஷயத்தில் அண்ணி என்று சொன்னதைக் கேட்டு, “உனக்கு ஒன்னு தேவைனா அண்ணினு வாய் நிறைய சொல்லு… சரி வா பார்க்கலாம்” என்று சுட்டிக்காட்டி செல்கிறார்.

சரவணணை சமையலறைக்கு அழைத்து செல்லும் சந்தியா தனக்கு சமைக்க கத்துகொடுங்க என்று கேட்கிறாள். இதற்கு சரவணன் சமையல் கத்துக்கனும்னா முதலில் அஞ்சறைப் பெட்டி எடுத்து வாங்க என்று கூறுகிறான். அஞ்சறைப் பெட்டி என்றால் என்னவென்றே தெரியாத சந்தியா, ஒரு பழைய இரும்பு டிரங்க் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து தருகிறாள். இதைப்பார்த்து கடுப்பான சரவணன், இது அஞ்சறைப் பெட்டி இல்லை, என்று கூறி சமையல் அறையில் இருந்த மசாலா பொருட்கள், வைக்கின்ற அஞ்சறைப் பெட்டியை எடுத்து இதுதான் அஞ்சறைப் பெட்டி என்று காட்டுகிறான்.

சந்தியா அஞ்சறைப் பெட்டியை திறந்து பார்த்துவிட்டு, அஞ்சறை இருக்கும்னு சொன்னீங்க இதிலென்ன 7 அறை இருக்கு என்று கேட்கிறாள். இதைக் கேட்டு கடுப்பாகும் சரவணன் கோபமாக பார்க்கிறான். சந்தியா பேசி சமாளிக்கிறாள்.

சரி இன்றைக்கு என்ன சமைக்கலாம் என்ற கேள்வி வரும்போது ஏற்கெனவே ஸ்வீட் செய்வது என்று கூறியது போல, குலோப் ஜாமூன் செய்ய கற்றுத் தருகிறான். சந்தியாவுக்கு குலோப் ஜாமூனுக்கு மாவு பிசைவது எப்படி, பாகு எடுப்பது எப்படி என்று சொல்லித் தருகிறான். சரவணன் முகத்தில் மாவு ஒட்டிக்கொள்ளும்போது சந்தியா துடைத்து விடுகிறாள். அதே போல, சரவணனும் துடைத்து விடுகிறான்.

சமையல் விஷயங்களை கற்றுக்கொள்ள சிரமப்படும் சந்தியா, எனக்கு சமையல் எதுவுமே தெரியாது. தெரியாமல் சமையல் போட்டியில் கலந்துகொண்டுவிட்டேன். நான் தோற்றுவிடுவேன் போல இருக்கிறது. அப்புறம் அத்தை கோபப்படுவாங்க என்று கூறுகிறாள். அதற்கு சரவணன், சமையல் கத்துக்கலாம், உங்களால் கத்துக்க முடியும் நீங்கதான் ஜெயிப்பீங்க என்று நம்பிக்கை தருகிறான்.

இதற்கு அடுத்து, சரவணன் லட்டு செய்ய கற்றுத் தருகிறான். சரவணன் எல்லாவற்றையும் சொல்லித் தர சந்தியா செய்கிறாள். லட்டு அழகாக செய்து முடிக்கிறார்கள். அப்போது, அங்கே வரும் சுந்தரம், தனது மருமகள் செய்த லட்டை சாப்பிட்டு இனிப்பாக நல்லா இருக்கிறது என்று சொல்லி பாராட்டி விட்டு செல்கிறார்.

இதையடுத்து, சரவணன் தனக்கு சோர்வாக இருக்கிறது தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டு தூங்கச் செல்கிறான். சரவணன் சண்தியாவுக்கு ஸ்வீட் செய்ய கற்றுத் தரும்போது இருவருக்கும் இடையேயான காதல் வெளிப்பட்டபடியே இருந்தது. சரவணன் தனக்கு ஸ்வீட் செய்ய கற்றுக்கொடுத்ததை நினைத்து சந்தோஷப்படுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Raja Rani Raja Rani 2 Vijay Tv Raja Rani Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment