‘Raja Rani’ Alya Manasa – Sanjeev Got Married: விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செம்பா – கார்த்திக் வேடத்தில் ஜோடியாக நடித்த, ஆல்யா மானசா – சஞ்சீவ் இருவரும் ஒரு நேர்க்காணலுக்குப் பிறகு நிஜ காதலர்களாக மாறினர்.
அதன் பிறகு காதலர் தினம் என்றாலே, பெரும்பாலான இணைய தளங்கள் அவர்களது ரொமாண்டிக் நேர்க்காணலை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புகிறார்கள். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி மேடையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அடிக்கடி வெளியூர்களுக்கு செல்வது, இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோக்களை அப்லோட் செய்வது என்றிருந்த இவர்களின் திருமணம் விரைவில் பிரமாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இவர்கள் ரகசிய திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.
இந்தத் தகவலை தற்போது சஞ்சீவ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ”ஆல்யாவின் பிறந்த நாள் அன்றே எங்களது திருமணம் நடந்து முடிந்துவிட்டது. சில பிரச்சனைகளால் அறிவிக்க முடியவில்லை. இப்போது இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். உங்களது ஆசீர்வாதத்தை வேண்டுகிறோம்.” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்த ஜோடி ஹனி மூனுக்காக மாலத்தீவுக்கு சென்றிருப்பது குறிப்பிடத் தக்கது!