/tamil-ie/media/media_files/uploads/2021/03/TAMILNADU-COVID-5.jpg)
Vijay tv raja rani serial Tamil news: ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசா மகளின் பிறந்தநாளில் ஆல்யாவின் கணவர் சஞ்ஜீவ் சர்பிரைசாக ஒரு கார் வாங்கி பரிசளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற ராஜா ராணி சீரியலில் நடிகை ஆல்யா மானசாவும் நடிகர் சஞ்ஜீவும் ஜோடியாக நடித்தனர். இருவரும் சிரியலில் மட்டுமல்லாமல் நிஜவாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ராஜா ராணி 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நாயகியாக ஆல்யா மானசா நடிக்கிறார். அவருடைய கணவர் சஞ்ஜீவ் காற்றின்மொழி சீரியலில் நடித்து கதாநாயகனாக நடிக்கிறார்.
டிவி சீரியல் ஜோடிகளில் பிரபலமான ஜோடி என்று ஆல்யா மானசா - சஞ்ஜீவ் ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர். சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆல்யா, சமீபத்தில், வெளியாகி பெரும் ஹிட் அடித்த எஞ்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு அட்டகாச நடனம் ஆடி அசத்தினார்.
இந்த நிலையில், ஆல்யா மானசா - சஞ்சீவ் மகள் ஐலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. ஆல்யா மானசா பிறந்தநாளில் அவருடைய கணவர் சஞ்ஜீவ் தனது காதல் மனைவிக்கு விலை உயர்ந்த காரை வாங்கி பரிசளித்துள்ளார். காரைப் பார்த்து சந்தோஷமடைந்த ஆல்யா மானசா அந்த காரை ஓட்டிப் பார்த்துள்ளார். அதோடு, ஆல்யா தனது கணவர் சஞ்ஜீவ் பரிசளித்த கார் அருகே ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.