நிஜ வாழ்வில் இணையும் சீரியல் ஜோடி: சித்து- ஸ்ரேயா திருமணம் எப்போது?

Vijay tv raja rani serial sidhu marry soon with sreya: முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசா ஜோடி காதலித்து திருமணம் செய்தது போல், இந்த பாகத்தில் நடித்து வரும் சித்துவும் காதல் திருமணம் செய்ய உள்ளார். அவர் சீரியல் நடிகையான ஸ்ரேயாவை திருமணம் செய்ய உள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றத சீரியல் ராஜா ராணி. இதில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாக நடித்தனர். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்து, பின் திருமணம் செய்து கொண்டனர். ராஜா ராணி சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘Diya Aur  Baati Hum’ என்ற ஹிந்தி சீரியலின் ரீமேக் ஆகும். இந்த இரண்டாம் பாகத்தில் சித்து கதாநாயகனாக நடிக்க ஆல்யா மானசா கதாநாயகியாக நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்ல் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் சித்துவிற்கு சிறந்த அறிமுக நாயகன் விருதும் ஆல்யாவுக்கு சிறந்த மருமகள் விருதும் கிடைத்துள்ளது.

முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசா ஜோடி காதலித்து திருமணம் செய்தது போல், இந்த பாகத்தில் நடித்து வரும் சித்துவும் காதல் திருமணம் செய்ய உள்ளார். அவர் சீரியல் நடிகையான ஸ்ரேயாவை திருமணம் செய்ய உள்ளார்.

நடிகர் சித்து விஜய் தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஸ்ரேயாவும் சித்துவும் காதலித்து வருகின்றனர். இருவரும் இணைந்து விஜய் டிவியில் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் உங்களுக்கு திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு சித்து ‘பொறுமையாக திருமணம் செய்து கொள்கிறோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் காதலித்துக் கொள்கிறோம்’ என பதிலளித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv raja rani serial sidhu sreya marriage soon

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express