விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது. குறிப்பாக விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில், ஒரு சில நிமிடங்களில் தோன்றி விட்டாலே அவர்கள் மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆகிவிடுகின்றனர்.
Advertisment
விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். மற்ற டிவி சேனல்களுடன் ஒப்பிடுகையில் விஜய் டிவியில் வரும் காமெடியன்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கின்றனர். இன்னும் சொல்ல போனால், மற்ற சேனல்களும், அவர்களை வைத்துதான் பல ஷோக்களை நடத்துகின்றனர்.
அதற்கேற்ற மாதிரி விஜய் டிவியும், ரசிகர்களை மகிழ்விக்க குக்கு வித் கோமாளி, நீயா நானா, சூப்பர் சிங்கர், மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை என பல நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. சனி, ஞாயிறு வந்துவிட்டால் போதும், மாலை ஆனதும் பல குடும்பங்களும் ரீமோட் எடுத்து விஜய் டிவி வைத்துவிட்டு, அப்படியே இரவு வரை ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்துவிட்டு தான் தூங்கவே செல்கின்றனர்.
அந்தவகையில் விஜய் டிவி இப்போது ராஜூ வூட்ல பார்ட்டி என்கிற புது நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இது விஜய் டிவியில் ஏற்கெனவே ஒளிபரப்பாகி பெரியளவில் ஹிட் ஆன ராமர் வீடு நிகழ்ச்சியின் அடுத்த வெர்ஷன் ஆகும்.
Advertisment
Advertisements
ராஜூ, பிரியங்கா ராமர், சுனிதா, மதுரை முத்து என விஜய் டிவி பிரபலங்கள்’ ராஜூ வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று, அவர்களிடம் கேள்வி கேட்டு, கலாய்ப்பது தான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.
இதன் முதல் எபிசோடில் கேபி, பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா, ஜூலி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த வாரம் நடிகை அமலா பால் விருந்தினராக கலந்து கொண்டார். அந்த புரோமோ எல்லாம் ஏற்கெனவே விஜய் டிவி யூடியூப் சேனலில் வெளியாகி இருந்தது. அதில் ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகி உள்ளது.
அதில், ஒரு லவ் மீட்டரை அமலா பால் கையில் கொடுத்து, உங்களுக்கு எந்த நடிகர் மேல் ரொம்ப கிரஷ் என பிரியங்கா கேட்க, உடனே அமலா பால் எனக்கு ஸ்கூல் படிக்கும் போது இருந்து சூர்யா ரொம்ப பிடிக்கும் என கூறி லவ் மீட்டரை பார்க்கிறார். ஆனால் அதில் சொல்யூஷன் மேலே ஏறவில்லை. உடனே அமலா பால் ஜோதிகா மேம் தான் ஏதோ பண்ணிட்டாங்க போல என சொல்ல உடனே ராஜூ நீங்க கல்யாணம் ஆகாத ஹீரோவ நினைச்சு பாருங்க என்கிறார்.
பிறகு அமலா, எஸ்டிஆர் என சிம்புவின் பெயரை சொல்லி, லவ் மீட்டரை பார்க்கும் போது சொல்யூஷன் கடகடவென்று மேலே ஏறிவிட்டது.
இந்த வீடியோவை பார்த்த பலரும், சூர்யா மாஸ், சூர்யா வேற லெவல், ஜோதிகா, சூர்யாவுக்கு லாக் போட்டு வச்சுருக்காங்க என கமெண்டில் கூற, இன்னும் சிலர் எஸ்டிஆர் டா என பெருமையுடம் அதில் பதிவிட்டு வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ!
&feature=youtu.be
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“