Vijay TV, Bigg Boss Season 3: கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணத்தினால், விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. விஜய் டிவி இதுவரை மறு ஒளிபரப்பு செய்யாத ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் மட்டும் தான். இது உண்மை நிகழ்ச்சியோடு தொடர்புடையது என்பதால் இதை மறு ஒளிபரப்பு செய்யாமல் இருந்தது. இப்போது மார்க்கெட்டைத் தக்க வைத்துக்கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியும் மறு ஒளிபரப்பு செய்யும் சூழலுக்கு விஜய் டிவி வந்துள்ளது.
ரூ500 க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்: தமிழக அரசு ஏற்பாடு
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் மன்னனனாக வலம் வந்தவர் கவின். இவர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து மக்கள் மத்தியில் பரிச்சயமாகியிருந்தார். அதே பேர் புகழோடு, விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர் கவின். இவர் பிக்பாஸ் வீட்டினுள் முதலில் அபிராமியில் ஆரம்பித்து, அடுத்த சில நாட்களில் சாக்ஷியை காதலிப்பதாக சொல்லி, எல்லாரையும் பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்பிவிட்டு, லாஸ்லியாவுடன் சுண்டு விரல் கோர்த்து காதல் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியவர்.
நேற்றைய நிகழ்ச்சியில் நடிகை சாக்ஷியுடன் இவர் காதல் வசனம் பேசும் காட்சிகள் ஒளிபரப்பாகின. அதில், ”எனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணுக்கு, என்னென்ன குவாலிஃபிகேஷன் இருக்கணும்னு சொல்ற லிஸ்ட்ல முதல் இடத்திலேயே நீ வந்துட்டே.. இது தெரியலையா உனக்கு... லூசு” என்று சர்வ சாதாரணமாக காதல் வசனம் பேசுகிறார் கவின். பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து இருந்தால் பிடிக்கும் என்று சொல்ல, சாக்ஷி அன்று முதல் நெற்றியில் பொட்டு வைத்து காட்சி அளிப்பார். சிறிது நாட்களில் இதுவும் கடந்து போகும் என்று கவின் லாஸ்லியா பக்கம் சாய்ந்து விட்டார்.
கோமாவில் விஜய் பட நடிகர் – வதந்திகளுக்கு மனைவி மறுப்பு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.