Vijay tv Rithika Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் பிரபலமானவர் தான் ரித்திகா. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த இவர் அவருடைய பாணியில் சமையல் செய்து அசத்தினார். இருப்பினும், இறுதிச் சுற்றுக்கு அவரால் செல்ல முடியவில்லை. ஆனாலும், சீசன் முழுவதும் மறக்க முடியாத தருணங்களை பார்வையாளர்களுக்கு வழங்கி இருந்தார் ரித்திகா. தவிர, கோமாளியாக வந்த பாலாவுடன் இவர் செய்த டைமிங் காமெடிகளுக்கு சிரிக்காத ரசிகர்களே இருந்திருக்க மாட்டார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்யலக்ஷ்மி சீரியலில் அமிர்தா என்ற ஒரு ரோலில் நடித்து வரும் ரித்திகா தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற ரியாலிட்டி ஷோவிலும் நடித்து வருகிறார். இதில், இவர் பாலாவுடன் மீண்டும் கூட்டணியில் இணைத்துள்ளார். இந்த ஷோவில் காமெடியிலும் நடிப்பிலும் கலக்கி வரும் இந்த ஜோடி கடந்த வார நிகழ்ச்சியில் நல்ல மதிப்பெண்ணை பெற்று இருந்தது.

ரித்திகா, அவர் தோன்றும் எல்லா நிகழ்ச்சியிலும் பாலாவுடனேயே ஜோடி சேர்கிறார். ஒருவேளை அவர் பாலாவை காதலிக்கிறாரா என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதள பக்கங்களில் உலாவி வருகின்றன. இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரின் சமீபத்திய இன்ஸ்டா லைவ்வில் விளக்கி உள்ளார். அதில், தானும் பாலாவும் நல்ல நண்பர்கள் என்றும், திரையில் வரும் ஒவ்வொரு செயலும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்கான ஒரு வழியாகும், ஒவ்வொரு நடிகருக்கும் இதுவே நோக்கம் என்றும் கூறி தெளிவுபடுத்தியுள்ளார்.
ரித்திகாவிடம் குக் வித் கோமளியின் 3 வது சீசனைப் பற்றிய கேள்விக்கு தன்னை மீண்டும் அழைக்க மாட்டார்கள். அழைத்தால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“