விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆண்டு ஒளிப்பரப்பான சீரியல் பகல் நிலவு. இந்த சீரியலுக்கு அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதில் சையது அன்வர், சமீரா, சௌந்தர்யா, விக்னேஷ்கார்த்திக், பிக்பாஸ் ஷிவானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த தொடர் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் சீரியலின் தொடர்ச்சியாக வந்தது.
இதில் காதலர்களாக நடித்த நடிகை சமீரா மற்றும் அன்வர் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு இருவரும் வேறுவேறு தொடர்களில் நடித்து வந்தனர். பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான றெக்க கட்டி பறக்குது மனசு சீரியலில் சமீரா நடித்தார். அதில் அன்வரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
சமீரா மற்றும் அன்வர் இருவரும் ஜோடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
தற்போது சமீரா தான் கர்ப்பமாக உள்ள தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் ’நாங்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறோம் எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க உள்ளது’ என்ற வாசகங்கள் பொறித்த டி சர்ட்டை இருவரும் அணிந்துள்ளனர்.
இதனையடுத்து சமீரா மற்றும் அன்வருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil