Kanaa Kaanum Kaalangal: 90’ஸ் கிட்ஸ்களுக்குப் பிடித்தமான பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த ’கனா காணும் காலங்கள்’ தொடரும் ஒன்று. 90-களில் பிறந்தவர்கள், பள்ளியில் படிக்கும் போது, பள்ளி கால நட்பை மையப்படுத்தி ஒளிபரப்பான இந்த சீரியல் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisment
அந்த சீரியலில் அறிமுகமாகி கவனம் பெற்று பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ இரண்டாவது சீசனில் ரச்சிதாவுக்கு ஜோடியாக நடித்தவர் இர்ஃபான். சீரியல் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், அதிலிருந்து விலகினார். பின்னர் ரச்சிதாவுக்கு ஜோடியாக, வெவ்வேறு நடிகர்கள் மாற்றப்பட்டாலும், விட்ட இடத்தைப் பிடிக்க முடியவில்லை சரவணன் மீனாட்சியால்.
சில படங்களில் நடித்துவிட்டு, திடீரென திரையிலிருந்து விலகிக் கொண்டார் இர்ஃபான். இந்த சூழலில் தான், தான் இயக்கி நடிக்கும் வெப் சிரீஸுக்கு நிதி கேட்டு அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று வெளியானது. இது குறித்து முன்னணி ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கும் இர்ஃபான்,
Advertisment
Advertisements
“எங்கள் குடும்பம் பிசினஸைப் பின்னணியாகக் கொண்டது. சினிமா ஆசைல இருந்தவன் நான் மட்டும் தான்.`மெர்க்குரி பூக்கள்' படத்துல ஜூனியர் ஆர்ட்டிஸ்டா ஸ்க்ரீனுக்கு வந்தேன். ஆனா என்னோட டார்கெட் என்னவோ டைரக்ஷன் தான். பெங்களூருவுல டைரக்ஷன் கோர்ஸ் படிச்சேன். ஷார்ட் ஃபிலிம் எடுத்தேன். அந்த அனுபவம் போதும்கிற ஒரு அறியாமையில எந்த இயக்குநர் கிட்டயும் உதவி இயக்குநராகச் சேரலை. நிதின் சத்யாவை வச்சு முதல் படமும் கமிட் ஆச்சு. ஆனா நிதிப் பிரச்னை. பூஜையோட படம் முடக்கிடுச்சு.
’கனா காணும் காலங்கள்’ நாடகத்துல கெடச்ச, பேர் என்ன சரவணன் மீனாட்சி சீரியல்ல ஹீரோவா மாத்துச்சு. சில பெரிய தயாரிப்பாளர்களும் என்னை ஹீரோவா நடிக்க கூப்பிட்டாங்க. அந்த நம்பிக்கைல நானும் சீரியல்ல இருந்து விலகிட்டேன். ஆனா வெளியான படங்கள் எதுவும் எனக்குக் கை கொடுக்கல. ஒரு கட்டத்துல என் தேவைக்கான பணமே என் கிட்ட இல்லாம கஷ்டப்பட்டேன். ஃபேமிலி சப்போர்ட் பண்ணுனாலும், எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்குல்ல.
ஃப்ரெண்ட் ஒருத்தன் சென்னையில ஹோட்டல் ஆரம்பிச்சிருந்தான். 'மச்சான் அதுல ஏதாச்சும் ஒரு வேலை கொடுடா'னு கேட்டேன். 'ஹோட்டல்ல என்னடா செய்வ'னு கேட்டான். பண உதவி தரவும் தயாரா இருந்தான். அப்படி வேணாம்னுட்டு அந்த ஹோட்டல்ல சர்வரா சேர்ந்துட்டேன். ஒருநாள் ஒரு கஸ்டமர் ‘தம்பி நீங்க சரவணன் மீனாட்சி இர்ஃபான் தானேன்னு’ என் வாய்சை வச்சு கண்டு பிடிச்சுட்டாரு. அது அக்கம் பக்கத்துல இருந்தவங்களுக்கும் கேட்டுடுச்சு. அன்னிக்கு மாதிரி என் வாழ்க்கைல நான் அழுததே இல்ல. என்னோட நோக்கம் சினிமா இயக்கணும்ங்கறது தான். இப்போ, 5,6 ஸ்கிரிப்ட் ரெடி, அதுக்கு டிரையல் பாக்க தான் இந்த வெப் சிரீஸ்” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.