மாநிறம் இல்லை என ஒதுக்கப்பட்ட சரவணன் மீனாட்சி நடிகை.. இன்று அனைவரும் பொறாமை படும் இடத்தில்

பெங்களூர் மருமகளான இவர் சென்னையில் உடைகளோ, ஆபரணங்களோ

vijay tv saravanan meenatchi rachitha
vijay tv saravanan meenatchi rachitha

vijay tv saravanan meenatchi rachitha : சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் நடித்த முதல் சீரியல் ‘பிரிவோம் சந்திப்போம்’. இந்த சீரியலில் அவர் ஏற்றிருந்த தோற்றம் மாநிறம் இல்லாத பெண்ணுக்கு ஏற்படும் திருமண தடைகள். சமூகத்தில் புறக்கணிக்கப்படுவது, கேலி கிண்டல்கள் பற்றி தான்.

இவருடன் இந்த சீரியலில் தினேஷ் நடித்திருந்தார். ஒரே சீரியலில் இருவருக்கும் காதல் ஏற்பட தினேஷை கரம் பிடித்தார் ரக்ஷிதா. அதன் பின்பு ரக்ஷிதா நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் பற்றி கேட்டகவே வேண்டாம்.

இவர் நடித்த அனைத்து எபிசோட்டுகளும் சக்கை போடு போட்டது. கண்டிப்பாக சீரியல் இந்த ஜென்மத்தில் முடியாது தொடரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ரியோ ராஜ் பெரிய திரைக்கு செல்வதால் சரவணன் மீனாட்சி சீரியல் 3 பாகம் முடிவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

சின்னத்திரயில் ரக்ஷிதா நடிப்புக்கு, ட்ரெஸிங் ஸ்ட்டைலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். சின்னத்திரை புகழ் மைனா நந்தினி இவரின் நெருங்கிய தோழி ஆவர். ரக்ஷிதா ஆரம்பத்தில் மாநிறம் இல்லாமல் டஸ்கி ஸ்கின் நிறத்தில் இருந்ததால் அவருக்கு பல வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. இருந்த போது தன்னுடைய விடா முயற்சியால் இன்று அவர் அடைந்திருக்கும் புகழ் அனைவரையும் பொறாமை படவைத்துள்ளது.

 

தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பெங்களூர் மருமகளான இவர் சென்னையில் உடைகளோ, ஆபரணங்களோ அதிகமா வாங்குறதில்லை. ஷாப்பிங் மொத்ததையும் பெங்களூரிலே முடித்துக் கொள்கிறார். அதிகம் சேலைகளையே விரும்பி அணிகிறார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv saravanan meenatchi rachitha serial actress rachitha images hot star

Next Story
big boss 3 finals: பிரம்மாண்டத்தின் உச்சம்! டைட்டில் வின்னர் முகென்… ஆனால் லக் அடித்தது தர்ஷனுக்கு தான்big boss 3 title winner
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com