vijay tv saravanan meenatchi serial rachitha : விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இந்த சீரியலில் அவர் ஏற்றிருந்த தோற்றம் மாநிறம் இல்லாத பெண்ணுக்கு ஏற்படும் திருமண தடைகள். சமூகத்தில் புறக்கணிக்கப்படுவது, கேலி கிண்டல்கள் பற்றி.
இவருடன் இந்த சீரியலில் தினேஷ் நடித்திருந்தார். ஒரே சீரியலில் இருவருக்கும் காதல் ஏற்பட தினேஷை கரம் பிடித்தார் ரச்சிதா. அதன் பின்பு ரச்சிதா நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் பற்றி கேட்டகவே வேண்டாம்.சீரியலில் பல பாகங்களை கண்ட சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து 2முறை மீனட்சியாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார் ரச்சிதா.
திவாகர் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றியே அது! மறக்க முடியாத சூப்பர் சிங்கர் சீசன்
கண்டிப்பாக சீரியல் இந்த ஜென்மத்தில் முடியாது தொடரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ரியோ ராஜ் பெரிய திரைக்கு செல்வதால் சரவணன் மீனாட்சி சீரியல் 3 பாகம் முடிவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது.இந்த சீரியலில் கிடைத்த புகழால் அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. இதுவரை இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் ரச்சிதா.
சின்னத்திரயில் ரச்சிதா நடிப்புக்கு, ட்ரெஸிங் ஸ்ட்டைலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். சின்னத்திரை புகழ் மைனா நந்தினி இவரின் நெருங்கிய தோழி ஆவர். ரச்சிதா ஆரம்பத்தில் மாநிறம் இல்லாமல் டஸ்கி ஸ்கின் நிறத்தில் இருந்ததால் அவருக்கு பல வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. இருந்த போது தன்னுடைய விடா முயற்சியால் இன்று அவர் அடைந்திருக்கும் புகழ் அனைவரையும் பொறாமை படவைத்துள்ளது.
தமிழில் ரச்சிதா இதுவரை பிரிவோம் சந்திப்போம் 2, சரவணன் மீனாட்சி 2, 3, இளவரசி, மசாலா குடும்பம் , நாச்சியார் சீரியல்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக் கூடிய ரச்சிதா பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே பெங்களூரில் தான்.
ஆனால், தனது காதல் கணவர் தினேஷ் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால், அவருக்காகவே அனைத்து தமிழ் மரபுகளை கற்று தெரிந்துக் கொண்டுள்ளார். கூடவே சமையலிலும் அசத்துவாராம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Vijay tv saravanan meenatchi serial rachitha saravanan meenatchi rachitha serial actress rachitha hotstar
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? 3 நாட்களில் முடிவெடுக்கும் ஆளுநர்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்அழகிரி
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்