இனி அருணா ஆட்டம் ஆரம்பம்… பேய் மோடுக்கு மாறிய செந்தூரப் பூவே சீரியல்; தெறிக்கும் மீம்ஸ்கள்

செந்தூரப் பூவே சீரியல் திடீரென பேய் மோடுக்கு மாறி வேகமெடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ளது. அருணா பேயாக வந்த பிறகு, இனி உங்க ஆட்டம் எல்லாம் குளோஸ், இனிமேல் அருணா ஆட்டம் ஆரம்பம் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Vijay TV, Senthoora Poove Serial, Priya Kalyanaraman acts as Ghost Character, netizens memes, ranjith roja, tamil tv serial news, விஜய் டிவி, செந்தூரப் பூவே சீரியல், பிரியா கல்யாணராமன் பேய் அவதாரம், நெட்டிசன்கள் மீம்ஸ், இனி அருணா ஆட்டம் ஆரம்பம், பேய் மோடுக்கு மாறிய செந்தூரப் பூவே சீரியல்; தெறிக்கும் மீம்ஸ்கள், actress Priya Kalyanaraman, tamil serial news, Senthoora Poove serial news

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப் பூவே சீரியல் திடீரென வேகமெடுத்து உள்ளது. அப்படியே சுமாராக போய்க்கொண்டிருந்த செந்துரப் பூவே சீரியலில் அருணா என்ற பேயாக அறிமுகமாகியுள்ள பிரியா கல்யாண ராமன் தெறிக்க விட்டு வருகிறார். இந்த சீரியல் பேய் மோடுக்கு மாறியுள்ளதால் நெட்டிசன்கள் மீம்களால் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல் இப்படிதான் திடீரென பேய், மந்திரவாதி என்று மாறி வேகமெடுத்து ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றது. தற்போது அந்த சீரியலும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்ட, செந்தூரப் பூவே சீரியல் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு காரணம், செந்தூரப் பூவே சீரியலில் திரைப்பட நடிகர் ரஞ்சித் நடித்ததும் ஒரு காரணம். ஆனால், போகப்போக சுமாராகவே போய்க்கொண்டிருந்தது.

செந்தூரப் பூவே சீரியலின் கதை இதுதான். ரஞ்சித் துரைசிங்கம் கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு முதல் மனைவியாக பிரியா ராமனும் இரண்டாவது மனைவியாக ஸ்ரீநிதி மேனனும் நடிக்கிறார்கள். சகோதரியாக யமுனா சின்னத்துரை மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். செந்தூரப் பூவே சீரியலில் துரைசிங்கத்தின் முதல் மனைவியான அருணா இரண்டாவது பிரசவ நேரத்தில் இறந்து விடுகிறார்.
அருணாவை காதலித்து திருமணம் செய்த துரைசிங்கம் அவருடைய இறப்பிற்கு பிறகு வாழ்க்கையில் எந்தப் பிடியும் இல்லாமல் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வருகிறார். குழந்தைகளின் நலனை கருதி துரைசிங்கம் இரண்டாவது குழந்தையின் மீது பாசமாக இருக்கும் ரோஜாவை குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், ரோஜா ஏற்கனவே ஒருவரை காதலித்து அவருடைய குழந்தை வயிற்றில் வைத்துள்ளார். ரோஜாவின் காதலன் உயிரோடு இல்லை என்பதால், குழந்தைக்காக வாழவேண்டும் என்பதால் துரைசிங்கத்தை திருமணம் செய்து கொள்கிறார்.

அதனால், ரோஜா துரைசிங்கத்தின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள ஆசைப்படுகிறாள். துரை சிங்கத்தின் சகோதரி அவனுடைய திருமணத்தையும் அருணா எப்படி இறந்தார் என்பதையும் கூறுகிறார்.

துரைசிங்கத்தின் முதல் மனைவி அருணாவின் மரணத்தை கேட்டு வருத்தப்படும் ரோஜாவும் அவருடைய குழந்தைகளுக்காகவும் , துரை சிங்கத்திற்காகவும் மனைவியாக வாழவேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.

இந்த சூழலில்தான், துரைசிங்கம் குடும்பத்தினர், அருணாவின் நினைவு நாள் அன்று கல்லறைக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வருகிறார்கள். அப்படி வரும்போது ராஜேந்திரனின் கண்களுக்கு மட்டும் அருணா தெரிகிறாள். அதனால், பயந்துபோன ராஜேந்திரன் தன்னுடைய மனைவியிடமும், ஐஸ்வர்யா விடவும் கூறுகிறார். ஆனால், அவர்கள் நம்பாமல் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அதே நேரத்தில், ராஜேந்திரன், ரோஜாவை கொல்வதற்காக அடியாட்களை இரவு நேரத்தில் வர வைக்கிறார். ரோஜாவை வெட்ட அரிவாளை ஓங்கும்போது ரோஜா திரும்பிப் பார்க்கிறார் .அப்போது ரோஜாவின் முகத்தில் அருணா தெரிகிறார். ரோஜாவையும் குடும்பத்தையும் பாதுகாப்பது தான் என்னுடைய வேலை. என்னுடைய குழந்தையுடன்கூட என்னால் விளையாட முடியாமல் குடும்பத்தை விட்டு பிரிசிட்டீங்களே… இனி தான் உங்களை பழி வாங்கப் போகிறேன் என்று பிரியா ராமன் பேய் கெட்டப்பில் மிரட்டியிருக்கிறார்.

செந்தூரப் பூவே சீரியலில் பிரியா கல்யாணராமன் திடீரென பேய் அவதாரம் எடுக்கும் புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. செந்தூரப் பூவே சீரியல் திடீரென பேய் மோடுக்கு மாறி வேகமெடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதனால், ரசிகர்கள் பலரும் செந்தூரப் பூவே சீரியலில் அருணா பேயாக வந்த பிறகு, இனி உங்க ஆட்டம் எல்லாம் குளோஸ், இனிமேல் அருணா ஆட்டம் ஆரம்பம் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv senthoora poove serial priya kalyanaraman acts as ghost character netizens memes

Next Story
சார்பட்டா படக்குழுவினரை அழைத்து பாராட்டிய உலகநாயகன்; நன்றி சொல்ல முடியாது சார் – நடிகர் ஆர்யாKamal Haasan meets Sarpatta Paramparai movie team, Kamal Haasan meets Sarpatta Paramparai team, Kamal Haasan meets Arya, Kamal Haasan meets Pa Ranjith, Director Pa Ranjith, Neelam Publications, சார்பட்டா படக்குழுவினரை அழைத்து பாராட்டிய கமல்ஹாசன், பா ரஞ்சித், ஆர்யா, பசுபதி, துஷரா விஜயன், ஷபீர், shabeer, pasupathi, jhon vijay, kalayarasan, kamal haasan, tamil cinema news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express