தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் இந்த சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுககும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த ரசிகர்கள் சீரியல்களில் தங்களுக்கு பிடித்தமான நட்சத்திரங்களை பார்த்து ரசிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் தனிப்பட்ட வாழக்கை குறித்து தகவல்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக முயற்சி செய்வார்கள். இதில் சிலர் சமூக வலைதளங்களில் வாயிலாக அவர்களிடமே நேரடியாக கேட்டுவிடுவார்கள்.
சிலர் நடிகர் நடிகைகள் தங்களது வாழ்வின் சுவாரஸ்யமாக நிகழ்வுகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பகிர்ந்துகொள்வது வழக்கம். இதில் குறிப்பிட்ட சில அவர்களது புகைப்படத்தை தவிர மற்ற எதையும் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனாலும் ரசிகர்கள் எப்படியாவது அவர்களின் தனிப்பட்ட தகவல்களை ஆராய்ந்து கண்டுபிடித்து விடுவார்கள்.
அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில சிக்கியுள்ளவர்தான் பிரபல சீரியல் நடிகர் அருண் பிரசாத். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள இவர், இவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை மட்டும் பகிர்ந்து வருவார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் விஜே ஆர்ச்சனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தாக தகவல் வெளியானது. இது குறித்து அவர்கள் இருவருமே வாய் திறக்காத நிலையில், தற்போது அர்ச்சனாவுடன் அருண்பிரசாத் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
காருக்குள் இருந்தபடி வெளியாகியுள்ள இந்த செல்ஃபி புகைப்படம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனதை உணர்த்துவது போன்று உள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதில் விஜே ஆர்ச்சான விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல்ல முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பாக்யலட்சுமி சீரிலில் அமிர்தாவாக நடித்து வரும் நடிகை ரித்திகா தமிழ் இவர்களுடன் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“