/tamil-ie/media/media_files/uploads/2021/03/ranjith-tv-serial-actor.jpg)
விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடிகர் ரஞ்சித்துக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவருக்கு மனைவியாக வர உள்ளவரும் சீரியல் நடிகை மாதிரியே இருப்பதாகக் கூறி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கியபோது கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அனைத்து தொலைக்காட்சி சீரியகள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டன. பின்னர், அரசு படப்பிடிப்புக்கு தளர்வுகளை அறிவித்த பின்னர், டிவி சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழக்கம் போல ஒளிபரப்பாகி வருகிறது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைகிற நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சினிமா, டிவி பிரபலங்கள் பலரும் திருமணம் செய்துகொண்டனர்.
அந்த வகையில், விஜய் டிவி சீரியல் நடிகர் ரஞ்சித்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இந்த சீரியலை இயக்குனர் அப்துல் கப்பீஸ் இயக்கினார். அதே நேரத்தில், ராஜபார்வை என்ற புதிய சீரியலும் தொடங்குகிறது.
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ரஞ்சித் ஹீரோவுக்கு நண்பராக நடித்து வந்தார். இந்த சீரியலில் இவருடன் வினோத் பாபு, தேஜஸ்வினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த சீரியல் முடிந்ததைத் தொடர்ந்து ரஞ்சித் திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
அண்மையில் ரஞ்சித்தின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நடிகர் ரஞ்சித் தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். திருமண நிச்சயதார்த்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், ரஞ்சித்தின் வருங்கால மனைவி பார்க்க சீரியல் நடிகை மாதிரியே இருப்பதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஞ்சித் இதற்கு முன்பு, சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி, தாய்வீடு போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.