Advertisment

டான்ஸ்- நடிப்பில் கலக்குபவர் ஆச்சே இவர்… விஜய் டிவி நடிகைக்கு சூப்பரான புது வாய்ப்பு!

சின்னத் திரையில், டான்ஸ், நடிப்பு என்று கலக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை புதிய வாய்ப்பாக வெப் சீரீஸில் நடிக்கும் ஒரு சூப்பரான வாய்ப்பை பெற்றுள்ளதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
vijay tv serial actress archana, serial actress archana gets new chance, in new web series, eeramana rojave serial actress archana, actress archana gets chance to act in new web series, விஜய் டிவி, சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு புதிய வாய்ப்பு , ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை அர்ச்சனா, archana, eeramana rojave serial actress

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஈரமான ரோஜாவே சீரியல் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த சீரியலில்

தேன்மொழி என்கிற ரோஜா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அர்ச்சனா. இவர் சின்னத் திரைக்கு நடன நிகழ்ச்சியின் மூலம் தான் அறிமுகமானார்.

Advertisment

சென்னையைச் சேர்ந்த நடிகை அர்ச்சனா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே நடனம் கற்றுக் கொண்டார். பின்னர், ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலக்கிய அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை அர்ச்சனா தனக்கு டான்ஸ் ஜோடி நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் நடித்தார். இதையடுத்து, அதே விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கதாபாத்திரமான தேன்மொழி நடித்தார். ஈராமான ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரை பார்வையாளர்கள் மத்தியில் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற பாப்புலரான நிகழ்ச்சியில் அர்ச்சனா போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் கலக்கிய அர்ச்சனாவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்துள்ளது.

அர்ச்சனா, டிவி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். நிறைய வீடியோக்களை பதிவிட்டு ரசிர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை அர்ச்சனா தற்போது இதழும் இதழும் இணையட்டும் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப்சீரிஸ் முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்த வெப்சீரிஸ் ஏழு பாகங்களாக வெளி வர உள்ளதாக தகவல் வெளியாகியது.

சின்னத் திரையில், டான்ஸ், நடிப்பு என்று கலக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை புதிய வாய்ப்பாக வெப் சீரீஸில் நடிக்கும் ஒரு சூப்பரான வாய்ப்பை பெற்றுள்ளதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Vijay Tv Serial 2 Eeramana Rojave
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment