சமூக ஊடங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் தர்ஷாவை, தற்போது இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த அரிய நிகழ்வை, தர்ஷா குப்தா ரசிகர்களுடன் ராசிகர்களுக்கு கேக் வெட்டிக் கொண்டாடினர்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
தனது செல்ல ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட தர்ஷா, இன்ஸ்டாகிராம் பதவில்,” அன்பு, அரவணைப்பு மற்றும் ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுவதற்குப் பதிலாக, இந்த அரிய நிகழ்வை ஆன்லைன் ரசிகர் வலைத்தள நிர்வாகிகள் மற்றும் எனது செல்லக் குட்டிகளுடன் கொண்டாடுகிறேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்” என்று பதிவிட்டார்.
தர்ஷா குப்தா ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய “முள்ளும் மலரும்” என்ற தொடரில் நடித்து வருகிறார். அதோடு சன் தொலைகாட்சியில் “மின்னலே” என்கிற தொடரிலும், விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் “செந்தூரப்பூவே” என்கிற நாடகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும், இயக்குனர் மோகன்.ஜி இயக்கம் ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil