விஜய் டி.வியில் ஒளிப்பரப்பாகும் நீ நான் காதல் தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்தாண்டு முதல் ஒளிப்பரப்பாகும் இந்த தொடர் ரீமேக் தொடராகும். இருப்பினும் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
200க்கும் அதிகமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி உள்ளது. இதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் புதுமுக நடிகர்கள் ஆவர். இப்படி அஞ்சலி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் வி.ஜே தனுஷிக்.
இலங்கையை சேர்ந்த இவர் மீடியா கனவை நிறைவேற்ற சென்னை வந்தவர். தொகுப்பாளினி ஆக வேண்டும் என்று வந்தவருக்கு விஜய் டி.வி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு கடந்த நவம்பர் 27-ம் தேதி மணி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இருவரின் நிச்சயதார்த்த புகைப்படத்தை தனுஷிக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக்கிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“