ஆட்டிப் படைக்கும் ஐபிஎல் ஃபீவர்: தர்ஷா ஆதரவு யாருக்கு?
ஐபில் ஃபீவர் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கையில், நடிகை தர்ஷா குப்தா கைலி கட்டிக்கொண்டு சி.எஸ்.கே ஜெர்சியை அணிந்து சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என்று கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இப்போதெல்லாம் சினிமா நடிகைகளைவிட டிவி சீரியல் நடிகை ரொம்பவே பாப்புலராக வலம் வருகின்றனர். அவர்கள் சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றனர். சீரியல் நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
Advertisment
வெள்ளித்திரையின் நடிகைகளுக்கு இணையான பிரபலத்துடனும், கவர்ச்சியுடனும் நடிகைகள் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, ஷிவானி என்று பலர் பாப்புலராக வலம் வருகின்றனர். இவர்கள் தங்களுடைய அழகான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் பாந்தமாக நடித்த நடிகை ஷிவானி சமூக ஊடகங்களில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
அதே போல விஜய் டிவியில் ஒளிபரபாகும் செந்தூரப் பூவே சீரியலில் நடிக்கும் தர்ஷா குப்தா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
தர்ஷா குப்தா ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் “முள்ளும் மலரும்” என்ற சீரியலில் நடித்தார். அதற்குப் பிறகு, சன் தொலைகாட்சியில் “மின்னலே” என்கிற தொடரிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் “செந்தூரப்பூவே” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
ஐபிஎல் போட்டி தொடங்கினால், சினிமா நட்சத்திரங்கள், சீரியல் நடிகைகள் என பலரும் தங்களுக்கு பிடித்த அணிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து ரசிகர்களையும் அணியையும் உற்சாகப்படுத்துவார்கள். இப்போது, ஐபிஎல் ஃபீவர் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் 7.00 ஆனாலே எல்லோரும் போட்டியைப் பார்க்க டிவி முன்பு தவம் கிடக்கிறார்கள். இந்த ஐபிஎல் ஃபீவருக்கு சினிமா நட்சத்திரங்கள், சீரியல் நடிகைகள் என யாரும் தப்பவில்லை.
தர்ஷா லுங்கி கட்டிக்கொண்டு, சென்னை ஜெர்சி அணிந்துகொண்டு பேட்டை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு கொடுத்துள்ள கவர்ச்சியான போஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"