பிரபல டிவி சீரியல் நடிகை மேக்னா வின்சென்ட் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகாரத்து செய்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இது வதந்தி என்று கூறிவருதால் உண்மையில் இந்த செய்தி வதந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' சீரியலில் சீதா ராம்குமார் சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து டிவி சீரியல் பார்வையாளர்களை ஈர்த்தவர் நடிகைர் மேக்னா வின்செண்ட். இந்தியில் வெளியான, சாத் நிபானா சாதியா என்ற சீரியலின் தமிழ் ரீ மேக் சீரியல்தான் தெய்வம் தந்த வீடு சீரியல். இதில் மேக்னா வின்செண்ட்டின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
மலையாள நடிகையான மேக்னா வின்செண்ட் தமிழ், மலையாளம் என நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/05/New-Project-2020-05-02T163446.944-300x200.jpg)
தெய்வம் தந்த வீடு சீரியலில் மேக்னாவுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் டிவியில் பொன்மகள் வந்தாள் சீரியலில் ரோகினி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியலிலும் மேக்னாவுக்கு வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவளும் நானும் சீரியலில் நடித்தார். அந்த சீரியலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படி தான் நடிக்கும் எல்லா சீரியலும் கவனத்தைப் பெற்றுவிடும் மேக்னா வின்செண்ட், டோமி டான் என்பவரை காதலித்து வந்தார். டான் டோமியின் சகோதரி டிம்பிள் ரோஸும் ஒரு டிவி நடிகைதான். மேக்னா வின்செண்ட்டும் டான் டோமியும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
2016-ம் ஆண்டு மேக்னா வின்செண்ட் - டான் டோமி, டிம்பிள் ரோஸ் - ஆன்சன் அண்ணன் தங்கை இரண்டு பேரின் நிச்சயதார்த்தம் ஒரே நாளி நடந்தது. இதையடுத்து, மேக்னா - டான் டோமி திருமணம் 2017-ம் ஆண்டு எர்ணாகுளத்தில் நடைபெற்றது. இவர்கள் திருமண நிகழ்வில் நிறைய சினிமா, டிவி, பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், மேக்னா வின்செண்ட்டும் - டான் டோமியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டதாகவும் டான் டோமி 2வது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேக்னா வின்செண்ட் விவாகரத்து தகவல் அவருடைய ரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த செய்தி வதந்தி என்றும் சிலர் கூறுகின்றனர். மேக்னாவின் ரசிகர்களும் நெட்டிசன்களும் ‘பொன்மகள் வந்தாள்’ ரோகிணிக்கு இந்த துயரமா? கடவுளே அது வதந்தியாகவே இருக்கட்டும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"