scorecardresearch

விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒன்றாக சாமி தரிசனம்… இது ரியல் மகா சங்கமம்

ரித்திகா சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்தாலும் முக்கியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை மட்டுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒன்றாக சாமி தரிசனம்… இது ரியல் மகா சங்கமம்

விஜய் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் அதே வேளையில். இந்த நிகழ்ச்சிகளில்’ பங்கேற்று வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தக்கவைத்துக்கொள்ள அவர்களும் தங்களது சமூகவலைதள பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இவர்கள் வெளியிடும் பதிவுகள் வைரலாக பரவி வரும் நிலையில், வலைதள பக்கங்களில் இவர்களை ஃபாலோ பண்ணும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனிடையே தற்போது விஜய் டிவியின் 2 சீரியலை சேர்ந்த நடிகைகள் இரண்டுபேர் ஒன்றாக கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மகன் எழிலுக்கு ஜோடியாக நடித்து வருபவர் ரித்திகா. சீரியல் மட்டுமல்லாது ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வரும் இவர், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்தாலும் முக்கியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை மட்டுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் நடிகைகயின் பவித்ரா ஜனனியுடன் கோவிலுக்கு சென்றுள்ள படத்தை வெளியிட்டுள்ளார். இருவரும் மாதேஸ்வரம் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். மேலும் இருவரும் மேக்கப் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv serial actress pavithra and rithika in temple photos viral