/tamil-ie/media/media_files/uploads/2021/04/rachith-vivek.jpg)
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிசை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார். நடிகர் விவேக்கின் மறைவு திரையுலகத்தினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வருத்தத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
நடிகர் விவேக் சினிமாவில் வெறுமனே நகைச்சுவையை மட்டும் வெளிப்படுத்தாமல் தனது நகைச்சுவைகள் வழியாக மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூக மாற்றத்தை வலியுறுத்துவது என கருத்துகளைப் புகுத்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். அவருடைய திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளக்கியது. திரையுலகினர் பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
அந்த வகையில், பிரபல சீரியல் நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, நடிகர் விவேக் மரணத்தை நினைத்து வருந்தி, “ஹ்ம்ம்… எப்போ இருப்பா யாரு போவாங்கனேதெரியலையே… இன்னிக்கி உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம் போல..” என்று கண்ணீர் விட்டு அழுத்துள்ளார்.
விவேக்கின் மரணத்தை நினைத்து நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி கண்ணீர் விட்டு அழுதஅ வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் பிரபலமானவர். தற்போது விஜய் விடியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.