Advertisment

அச்சச்சோ... அந்த ஸ்மைல் அமேசிங்... பழைய கண்ணம்மாவின் வைரல் லுக்

ரோஷினி ஹரிப்பிரியன் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினாலும் அவரை மிஸ் செய்யக்கூடிய பல ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்

author-image
WebDesk
New Update
அச்சச்சோ... அந்த ஸ்மைல் அமேசிங்... பழைய கண்ணம்மாவின் வைரல் லுக்

தற்போதைய காலகட்டத்தில் திரைப்பட நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்குகே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் ஒரு சீரியலில் நடித்து பிரபலமாகி அந்த சீரியலில் இருந்து அவர் விலகிவிட்டாலும் ரசிகர்கள் அந்த நடிகை தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

Advertisment
publive-image

அந்த வகையில் சின்னத்திரையின் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வந்தவர் ரோஷ்னி ஹரிப்பிரியன். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமான இவருக்கு முதல் சீரியலே டாப் ஹிட்டாக அமைந்து இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

publive-image

சின்னத்திரையில் சீரியல் நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருப்பார்கள். இதனால் நடிகைகள் வெளியிடும் சிறு பதிவுகள் கூட இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம். அந்த வகையில்ரோஷ்னி ஹரிப்பிரியனுக்கு இணையத்தில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது.

publive-image

ரோஷினி ஹரிப்பிரியன் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினாலும் அவரை மிஸ் செய்யக்கூடிய பல ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள். மேலும் அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிடும் பதிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.சீரியலில் இருந்து விலகிய ரோஷ்னி, விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

publive-image

இந்த நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரோஷ்னி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து ரோஷ்னி எவ்வித தகவலும் தெரிவிக்காத நிலையில், இந்த செய்தி ஒரு வதந்தியாகவே போய்விட்டது. தற்போது அவர் எந்த நிகழ்ச்சி மற்றும் சீரியல்களில் நடிக்கவில்வைல என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

publive-image

இதில் ரோஷினி, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

publive-image

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு ரோஷ்னி ஹரிப்பிரியன் அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Roshini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment