விஜய் டிவி சீரியல் நடிகை சமீரா கர்ப்பமாக இருக்கும்போது கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆண்டு ஒளிப்பரப்பான பகல் நிலவு சீரியலில், ஜோடியாக நடித்த் சையது அன்வர் மற்றும் சமீரா கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
சீரியலில் காதலர்களாக நடித்த நடிகை சமீரா மற்றும் அன்வர் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு இருவரும் வேறுவேறு தொடர்களில் நடித்து வந்தனர். பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான றெக்க கட்டி பறக்குது மனசு சீரியலில் சமீரா நடித்தார். அதில் அன்வரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
சமீரா மற்றும் அன்வர் இருவரும் ஜோடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
சில நாட்களுக்கு முன் சமீரா தான் கர்ப்பமாக உள்ள தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார்.
இந்தநிலையில் நடிகை சமீரா தனது வீட்டு மாடியில் கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பேசு பொருளாகியுள்ளது. ஏனெனில் நடிகை சமீரா கர்ப்பமாக உள்ள நிலையில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சமீராவை கவனமாக இருக்க சொல்லி பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், ஞாபகம் இருக்கா நீங்க கர்ப்பமா இருக்கீங்க என கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார்.
நிறைய பேர் சமீரா ஒரு நல்ல கிரிக்கெட்டர் போல் விளையாடுவதாக கூறினாலும் கவனமாக இருக்க அறிவுறுத்துகின்றனர். சிலர் சமீராவை திட்டவும் செய்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil