ரசிகர்கள் பலருக்கும் தங்கள் அபிமான நடிகர்கள் மற்றும் நடிகைகளின் மேக்கப் இல்லாத தோற்றத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அந்த வகையில் விஜய் டிவி பிரபலம் சரண்யாவின் கொஞ்சம்கூட மேக்கப் இல்லாத புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக ரசிகர்கள் தங்களுகு பிடித்த சினிமா, டிவி நடிகர்களை மேக்கப் இல்லாமல் இயல்பான தோற்றத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கத்தான் செய்கிறது. இன்று சமூக ஊடகங்களின் காலத்தில் பல நடிகர், நடிகைகளும் தங்களுடைய மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட ரசிகர்களும் அவற்றை உடனுக்குடன் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. அதிலும் முற்றிலும் மேக்கப் இல்லாமல் தோன்றுவது அரிதுதான்.
இந்த நிலையில், ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யாவின் சிறிதுகூட மேக்கப் இல்லாத புகைப்படத்தை விஜய் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
காதல் முதல் கல்யானம் வரை மற்றும் ஆயுத எழுத்து சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா. ஆயுத எழுத்து சீரியலில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/New-Project-2020-04-25T214201.408-300x200.jpg)
நடிகை சரண்யா இலங்கையை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சரண்யாவின் சிறிதுகூட மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
சரண்யாவின் மேக்கப் இல்லாத புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் சரண்யா இப்படிதான் இருப்பாரா? என்றும் மேக்கப் இல்லாமலும் அழகாகத்தான் இருக்கிறார் என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"