Advertisment

காதலரை கரம்பிடித்த விஜய் டிவி நடிகை; பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

காதலரை மணந்த சின்னத்திரை நடிகை; பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

author-image
WebDesk
Oct 30, 2023 22:40 IST
New Update
shimona james

காதலரை மணந்த சின்னத்திரை நடிகை; பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

பாவம் கணேசன் சீரியலி்ல் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ஷிமோனா ஜேம்ஸ் தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் பாவம் கணேசன். கலக்கப்போவது யாரு நவீன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த இந்த சீரியலில், பிரியா என்ற கேரக்டரில் நடித்தவர் ஷிமோனா.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷிமோனா, ஆரம்ப காலங்களில் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்தார். பின்னர் சன் டிவியில் ஒளிப்பரப்பான நாயகி சீரியலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பாவம் கணேசன் சீரியலில் நடித்தார்.

அந்த சீரியலுக்குப் பிறகு சின்னத்திரையில் நடிக்காமல் இருந்த ஷிமோனா, ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக, இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில் தான் ஷிமோனா திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஷிமோனா தனது நீண்ட நாள் காதலர் கிரண் நேதனல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை ஷிமோனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment