shivani narayanan vadivelu dance viral video: பிக் பாஸ் புகழ் ஷிவானி, வடிவேல் நடனமாடிய பாட்டுக்கு நடனமாடிய வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
பிக் பாஸ் நிழ்ச்சிக்குப் பிறகு ஷிவானி, தனது இன்ஸ்டாகிராமில் டான்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ” வடிவேலுவின் நடனமாடிய வாடி பொட்ட புள்ள வெளிய” பாடலுக்கு நடனமாடி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேலும், “தலைவன் பாட்டுக்கு ஆடுறதே பெரும் சந்தோஷம்” எனக் குறிப்பிட்டார்.
கதிருக்கு என்ன ஆச்சு? பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்ஸ்
ரெட்டை ரோஜா, பகல் நிலவு ஆகிய சீரியல்களில் நடித்து தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பிரபலமான நடிகை ஷிவானி நாராயணனுக்கு பெரிய ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. சீரியல்களைத் தாண்டி, சமூக ஊடகங்களில் அழகழகான புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு கலக்கினார். ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ஒரு பெரியரசிகர் கூட்டமே உள்ளது. இந்த சூழலில்தான் ஷிவானி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
View this post on Instagram
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகை ஷிவானி போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் 60 நாட்களுக்கு மேலாக இருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil