விஜய் டிவி இவரை நம்பித்தான் இருக்கிறதா… யாரை சொல்கிறார் இந்த நடிகை?

Vijay TV Serial actresses try to impress pugazh latest promo: காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் புகழை இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கும் சீரியல் நடிகைகள்; இந்த வார ப்ரோமோ…

விஜய் டிவியின் புதிய காமெடி நிகழ்ச்சியில், ’விஜய் டிவியே உன்ன நம்பிதான் இருக்கு’ என சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஒருவரைப் பற்றி கூறியது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி காமெடி நடிகர் புகழின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானவர் புகழ். பின்னர் ’அது இது எது’, ’கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு காமெடி செய்து வந்தார்.

இந்த நிலையில், விஜய் டிவி புதுவிதமாக அறிமுகப்படுத்திய சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி, புகழுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் கோமாளியாக வந்து, இன்று விஜய் டிவியின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்துள்ளார் புகழ். அவர் தற்போது, சில திரைப்படங்களில் காமெடி நடிகராக நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.

விஜய் டிவியின் எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் காமெடி இருக்கும் என்றாலும் தற்போது, புதுவிதமான காமெடி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் காமெடியன்களுக்கு சீரியல் நடிகைகளை ஜோடியாக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவே புகழை வைத்து தான் செய்யப்பட்டிருந்தது.

இந்த வார எபிஷோடில், புகழுக்கு நிகழ்ச்சியில் ஜோடி யார் என்பதற்கான போட்டி இருப்பதாக ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் நடிகைகள் ஒவ்வொருவராக புகழை இம்ப்ரஸ் செய்ய பார்க்கின்றனர். இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்தே புகழை புகழ்ந்து வரும் தர்ஷா குப்தா, ஒரு படி மேலே போய் ‘விஜய் டிவியே உன்ன நம்பிதான் இருக்கு புகழ்’ என்கிறார். இதைக்கேட்டு பதறிப்போகிறார் புகழ். விஜே அர்ச்சனா புகழுக்காக  பாடல் ஒன்றைப் பாடுகிறார். இப்படி எல்லோரும் புகழை இம்ப்ரஸ் செய்ய முயற்சிப்பதாக ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv serial actresses try to impress pugazh latest promo

Next Story
பொறாமை… ஈகோ… வளர்ச்சியை தடுக்கிறார்கள்..! பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகிய வனிதாVanitha Vijaykumar, Vanitha Vijaykumar walkout from BB Jodigal show, Vijay TV, வனிதா விஜயகுமார், பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விலகல், பிக் பாஸ் ஜோடிகள், விஜய் டிவி, சுரேஷ் சக்ரவர்த்தி, bigg boss jodigal, vanitha statement, vanitha vijaykumar walkout, bb jodigal, suresh chakravarthy, actress vanitha
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com