Advertisment

அரண்மனை கிளி: ஜானுவுக்கு இப்போ தான் அர்ஜூன் மேல பொசஸிவ்னெஸ் வந்திருக்கு!

Arjun Janu : ”சார் கல்யாண புடவையும், தாலியும் வாங்கினீங்களே அது யாருக்கு? இந்த தாலிக்கு நான் ஏன் குங்குமம் வைக்கணும்”

author-image
WebDesk
Aug 31, 2019 10:31 IST
New Update
aranmanai kili serial update, arjun janu

அரண்மனை கிளி

Vijay TV's Aranmanai Kili Serial: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘அரண்மனை கிளி’ சீரியலில் அர்ஜுன் ஜானு விவாகரத்து விஷயம் தற்போது வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ஜானுவின் மனதில் அர்ஜூனை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்துடன், பொஸசிவ்னெஸும் வந்திருக்கு. அவன் மேல் தான் கொண்டுள்ள அன்பை, அர்ஜுனிடம் சொல்ல வரும்போது பேச முடியாமல் தவிக்கிறாள் ஜானு. எதுவோ பேச வந்து எதையோ செய்துவிட்டு, இன்னும் அர்ஜுனிடம் பேச தைரியம் வராதவளாக இருக்கிறாள் ஜானு.

Advertisment

திடீரென, ஷாப்பிங் போகலாம் வான்னு ஜானுவை அழைச்சுக்கிட்டு போகிறான் அர்ஜுன். ”எதுக்கு சார் இப்போ ஷாப்பிங்” என்று ஜானு கேட்க, ”ஒண்ணும் இல்லை.. பேசாம வா” என்று கூறியவாறு அவளை அழைத்துக் கொண்டு செல்கிறான். துணிக்கடையில் நுழைந்து, ”ஒரு கல்யாண புடவை எடு ஜானு” என அர்ஜூன் கூற, ”கல்யாண புடைவையா? டைவர்ஸ் பண்ணிட்டு உடனே சார் இன்னொரு கல்யாணத்துக்கு தயாராகிட்டாரான்னு” தனக்குத் தானே நினைத்துக் கொள்கிறாள் ஜானு.

”தாலிக்கு ஆர்டர் பண்ணி இருக்கேன் ஜானு. அவர்தான் போன் செய்தார். தாலி ரெடியாகிருச்சாம்... நம்ம பரம்பரை தாலி மாதிரிதான் செய்து இருக்காறாம். வீட்டுக்கு போனதும் வர சொல்லி இருக்கேன்” என  அர்ஜூன் கூற, “ஓ.. பரம்பரை தாலிக்கு வேற ஆர்டர் குடுத்தாச்சா... சார் உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது சார்னு” மீண்டும் தனக்குள்ளே சொல்லிக் கொள்கிறாள் ஜானு.

”போகும் போது குதூகலமா போன.. இப்போ மூஞ்சை தொங்க போட்டுட்டு வர்றேன்னு” விஜயா கேட்க, ”விஜயாக்கா எனக்கு மனசு சரி இல்லை” என ஜானு கூற காரணம் கேட்கிறாள் விஜயா. ”அக்கா ஷாப்பிங் போன இடத்தில் கல்யாண புடவை, தாலின்னு வாங்கினாருக்கா.எதுக்குன்னு கேட்டால் சொல்ல மாட்டேன்னு சொல்றார். இன்னிக்கு இதை பத்தி பேசாம விட மாட்டேன்க்கா” என்று விஜயாவிடம் கூறிய ஜானு, விறுவிறு என மாடிக்கு செல்கிறாள்.

மேலே சென்ற ஜானு, ”சார் கல்யாண புடவையும், தாலியும் வாங்கினீங்களே அது யாருக்கு? இந்த தாலிக்கு நான் ஏன் குங்குமம் வைக்கணும்” என்று கேட்கிறாள் ஜானு. ”அந்த தாலி உங்க அக்கா ரேணுகாவுக்கு ஜானு. அவளுக்கு நாம தான் தாலி வாங்கணும். ரேணுகாவுக்கு கல்யாணம் தெரியுமா” என அர்ஜூன் கேட்கிறான்.

ரேணுகா முதலில் அர்ஜுனுக்கு பேசி முடித்து, மாற்றுத்திறனாளி அர்ஜுனை பிடிக்காமல் ஓடிப்போனவள். தற்போது மீனாட்சி அம்மாவை பழி வாங்க, அர்ஜூனின் தம்பியை காதலிக்கிறாள்.

#Vijay Tv #Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment