Ayudha Ezhuthu Serial: விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘ஆயுத எழுத்து’. இந்த சீரியலில் ஒரு சப் கலெக்டருக்கும், ஊரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் காளியம்மாவுக்கும் இடையே ஏற்படும் உரசல் தான் கதை.
காளியம்மாவின் புருஷன், அவள் மீது உயிரையே வைத்திருந்தாலும், அவள் செய்யும் அடாவடி செயல்களால் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 4 ஆண் பிள்ளைகள் என்றாலும், கடைசி பையன் சக்தி மட்டும் தான் அப்பாவிடம் நன்றாக பேசி, பாசமாக இருந்து வருகிறான். இதில் சப் கலெக்டர் இந்திரா மீது, காளியம்மாவின் கடைக்குட்டி சக்திக்கு காதல்.
இதற்கிடையே, பள்ளிக்கூடம் பிள்ளைகளை வன்மம் நிறைந்தவர்களாக, திருடனாக மாற்றும் அதனால் நான் உயிரோடு இருக்கும் வரையில் இந்த ஊரில் அது நடக்காது என்கிறாள் காளியம்மா. ஊரில் பள்ளிக்கூடம் நடக்காமல், ஆசிரியர்கள் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்குகிறார்களே என கவலையில் இருக்கிறாள் சப் கலெக்டர் இந்திரா. பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகள் வராமல் போனதற்கு அந்த ஊரின் அடாவடி பெண்மணி, காளியம்மாதான் காரணம் என்று இந்திராவுக்கு தெரிந்து போகிறது. எப்படியாவது பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைகளை சேர்த்தே ஆக வேண்டும் என்று முடிவெடுக்கும் இந்திரா, வீடு வீடாக சென்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கோரிக்கை வைக்கிறாள்.
ஆனால், காளியம்மாவை கடவுளாக மத்திக்கும் அந்த ஊரின் அடிமை கூட்டம், அவளை மீறி நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்கிறார்கள். இவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று எண்ணிய இந்திரா, கோயில் முன்பு கூட்டத்தை கூட்டி பேச ஆரம்பிக்கிறாள். அந்நேரம் பார்த்து காளியம்மாவின் கார் வந்து நிற்கிறது. உடனே அங்கிருந்த அனைவரும் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.
நீ காதலிக்கிற சப்கலெக்டருக்கு இப்போ என்ன உதவி செய்யப்போறேன்னு சக்தியிடம் கேட்கிறார் அவனின் அப்பா. இந்த விஷயத்துல நான் அம்மா கட்சிதான். என்னதான் இந்திராவை நான் காதலிச்சாலும், அம்மா மேலதான் எனக்கு விசுவாசம் அதிகம். அம்மா இந்த ஊரையே கட்டமைச்சவங்கப்பா.. அவங்களுக்கு எதிரா என்னால நடக்க முடியாது என்கிறான் சக்தி.
அந்த ஊரில் பள்ளிக்கூடம் நடக்குமா இல்லையா என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியும்.