விஜய் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இது பெங்காலியில் வெளியான ஸ்ரீமோயி சீரியலின் தமிழ் பதிப்பாகும். இந்த பாக்கியலட்சுமி சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியலட்சுமியின் கணவர் கோபி ஒரு இரவு முழுவதும் ராதிகா வீட்டில் இருந்துவிட்டு காலையில் வீட்டுக்கு திரும்புகிறார். இதைப் பற்றி தெரிந்துக் கொண்ட அவரது மகன் எழில் அவரிடம் கோபமாக கேள்வி கேட்கிறார். எழில் கேள்வி கேட்டதால் கோபமடைந்த கோபி எழிலை வீட்டை விட்டு வெளியில் போக சொல்கிறார். அடுத்ததாக இன்று என்ன நடந்தது என இப்போது பார்க்கலாம்.
எல்லோரும் எழில் மீது கோபப்பட்டு அவனை குறை சொல்கிறார்கள். பாக்கியலட்சுமியால் தான் எழில் குட்டிசுவராக போய்விட்டதாக பாட்டி திட்டுகிறார். இதனால் மனமுடைந்த எழிலை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார் பாக்கியலட்சுமி. ஆனால் எழில் இங்க எதுவும் சரியில்லை என கோபத்துடன் சொல்லிவிட்டு செல்கிறார்.
மறுநாள் மீண்டும் இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது. எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஜெனிக்கு போன் வருகிறது. கான்வென்டில் இருந்து சிஸ்டர் அவளுக்கு போன் செய்கிறார்.
மசாலா கேட்பதற்காக கூப்பிடும் அவருக்கு என்ன பதில் சொல்வது என ஜெனி கேட்கிறார். இதனால் அப்போது பெரிய வாக்குவாதம் வெடிக்கிறது. அப்பா மசாலா பிஸ்னெஸ் வேண்டாம் என சொல்லிவிட்டார், அதனால அம்மா இனி மசாலா தர மாட்டாங்க, என்று சொல்லிவிடு என மூத்த மகன் செழியன் சொல்கிறார்.
கோபியும், பாக்கியா இனி எந்த பிஸ்னஸும் செய்ய மாட்டார்னு சொல்லிவிடு என சொல்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் தனக்கு எதிராக பேசுவதை பார்த்து கண்ணீருடன் கலக்கம் அடைகிறார் பாக்யா. அதை பார்த்த ஜெனி அதிர்ச்சி அடைகிறார். சிஸ்டர் போன் நம்பர் கொடு நான் பேசி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என சொல்லும் பாக்யா எனக்காக நீ செழியனிடம் சண்டை போடாதே, நீங்க சந்தோசமாக இருங்க என சொல்லிவிட்டு போகிறார்.
அதன் பின் மசாலா வாங்க வரும் பெண்ணிடம் பாக்யாவின் மாமியார் இனி மசாலா வாங்க வராதே என சொல்லி அனுப்புகிறார்.
பள்ளியில் சந்தோஷிடம் பேச மறுக்கிறார் இனியா. இனி உன்னிடம் பேச மாட்டேன் என நேரடியாகவே சொல்லிவிடுகிறார். மாலையில் இனியாவை அழைத்து செல்ல பாக்யா வருகிறார். அப்போது சந்தோஷை வழியில் பார்க்கும் இனியா அவனிடம் எதுவும் பேசாததால் சந்தோஷ் சில நொடி நின்று பார்த்துவிட்டு சென்றுவிடுகிறார்.
அவனிடம் ஏன் பேசுவதில்லை என கேட்கிறார் பாக்யா. அடுத்த கிளாஸ் பையனுடன் உனக்கு எப்படி நட்பு வந்தது என இனியாவிடம் கேட்கிறார் பாக்யா. இனியா பதில் சொல்வதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil