Vijay Tv Serial News : அடுத்தடுத்த திருப்பங்களால் விஜய் டிவி யின் முன்னனி சீரியலாக பாக்கியலட்சுமி உருவெடுத்துள்ளது. சீரியலில் பாக்கியலட்சுமி ரோலில் நடித்து வரும் சுசித்ராவுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அம்மா ரோலில் அசத்தி வரும் சுசித்ரா சமீபத்தில் நடைபெற்ற ‘விஜய் அவார்ட்ஸ்’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த அம்மாவுக்கான விருதை தட்டிச் சென்றார்.
பாக்கியலட்சுமிக்கு மகனாக எழில் ரோலில் நடித்து வரும் வி.ஜே.விஷாலுடன் சுசித்ரா நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
‘பாக்கிய நீங்க ஸ்டெப் போடுவீங்கனு இப்பத்தான் தெரியுது, உங்க பையன் எழில் டான்ஸ் ஸ்டெப் எல்லாம் நல்லா போடுறாரு’ என ரசிகை ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். சீரியலில் அடக்கமாக, குடும்பத்தை கவனிக்கும் பாக்கியாவா டான்ஸ் ஆடுறது என ரசிகர்கள் பலரும் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil