Vijay TV serial: அம்ரிதா ஏற்கனவே திருமணமானவள்… என்ன செய்யப்போகிறான் எழில்

Vijay tv serial baakiyalakshmi today episode ezhil shocked when amritha married already : அம்ரிதா திருமணமானவள் என்று தெரிந்து அதிர்ச்சியாகும் எழில், ராஜேஷிடம் சண்டையிடும் கோபி, இன்றைய எபிஷோடில்…

Vijay tv serial baakiyalakshmi today episode ezhil shocked when amritha married already : அம்ரிதா திருமணமானவள் என்று தெரிந்து அதிர்ச்சியாகும் எழில், ராஜேஷிடம் சண்டையிடும் கோபி, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay TV serial: அம்ரிதா ஏற்கனவே திருமணமானவள்… என்ன செய்யப்போகிறான் எழில்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

அம்ரிதாவின் பெற்றோர் அவளை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு கிளம்புவதாக சொல்கிறார்கள். அதற்கு அம்ரிதா என்னை நம்பாமல், என்னை கண்காணிக்கிறதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு என்கிறாள். ஆனாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் சந்தேகப்படுவதால் ரூம்க்குள் வந்து அழுகிறாள் அம்ரிதா.

அடுத்தாக செழியனுடன் எப்போதும் சண்டையாக இருப்பதாக ஜெனி சொல்கிறாள். அதற்கு பாக்கியா தான் பிரச்சனையை சரி செய்வதாக கூறுகிறாள். காதலிக்கும் போது என் கூடவே இருந்தான், இப்ப என்கூட பேச கூட மாட்டேங்குறான் என புலம்புகிறாள்.

அடுத்ததாக எழிலுக்கு அம்ரிதாவின் அப்பா போன் செய்து தனியாக சந்திக்க வரச் சொல்கிறார். எழிலும் பாக்கியாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறான். அதன் பின் இனியா பிரின்சிபல் உன்ன பார்க்கனும் என்று சொன்னதாக பாக்கியாவிடம் சொல்கிறாள். அதற்கு பாக்கியா கோபமாக, நீ என்ன தப்பு செஞ்ச என கேட்கிறாள். ஆனால் இனியா நான் எதுவும் பண்ணல. உன்ன வரச் சொன்னாங்க அவ்வளவுதான் என கோபமாக சொல்லிவிட்டு கிளம்புகிறாள். பின்னர் செல்வி, செழியனை வழிக்கு கொண்டுவர ஜெனிக்கு ஐடியா கொடுப்பதாக கலாய்க்கிறாள்.

Advertisment
Advertisements

எழிலிடம் அம்ரிதா கூட ஏன் பேசிகிட்டு இருக்க என கோபமாக கேட்கிறார் அம்ரிதா அப்பா. ஃபிரண்ட் சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் என எழில் சொல்ல, நீங்க ரெண்டு பேரும் ஒன்ன படிக்கல அப்புறம் எப்படி ஃப்ரண்ட்ஸ் என கேட்கிறார். மேலும் அம்ரிதாவ நாங்க படிக்கிறதுக்குதான் காலேஜ் அனுப்புறோம் கண்டவன் கூட சுத்துறதுக்கு இல்ல, எங்க குடும்ப நிலைமை வேற இப்ப நல்லா இல்லை நீ அவளோட பேசக் கூடாது என்கிறார்.

நான் ஃபிரண்டா பேசுவதில் என்ன பிரச்சனை என கேட்கும் எழிலிடம், நான் அவளோட மாமனார் என பெரிய குண்டை தூக்கி போடுகிறார் அம்ரிதா அப்பா. அம்ரிதா ஏற்கனவே கல்யாணமாவள் என்றும் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி ஆகிறான் எழில்.   

ராதிகா வீட்டில் கோபி, மயூ வந்துட்டாளா என கேட்க, டீச்சர் இன்னும் கொண்டு வந்து விடல என சொல்கிறாள் ராதிகா. வீட்டிற்கு போக முடியாததை நினைத்து, மயூ மீது அக்கறை இருப்பதாக காட்டி கொள்கிறான் கோபி. மேலும் ராதிகாவிடம் மயூவை கூட்டி வா என்றும் சொல்கிறான். ஆனால் கூட்டி வர வண்டி இல்லாததால் நீங்க என்ன கூட்டி போங்க என ராதிகா சொல்ல அதிர்ச்சி ஆகிறான் கோபி. மாட்டிக் கொள்வோம் என நினைக்கும் கோபி, பின்னர் ராதிகா வற்புறுத்தவே ஒருவழியாக கூட்டிட்டு போறேன் என ஒத்துக் கொள்கிறான். இருவரும் கிளம்பி வெளியில் வரும்போது, ராதிகாவின் கணவர் அப்போது அங்கு வருகிறான்.

publive-image

சந்தேகப்பட்டு பேசும் ராஜேஷிடம் கோபி சண்டை போடுகிறான். பின்னர் ராதிகா கோபியை வீட்டுக்குள் அழைத்து செல்கிறாள். ராஜேஷ் கதவை தட்டிக் கொண்டே இருக்கிறான். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: