Vijay TV Serial: கோபி ஏன் பொய் சொன்னாரு… குழப்பத்தில் ராதிகா

Vijay TV bakiyalakshmi serial today episode bakiya lands in trouble: இனியா ஸ்கூலில் பாராட்டியதை பெருமையுடன் தன் வீட்டில் சொல்கிறாள் பாக்கியா. டாக்குமெண்டில் தப்பு எதுவும் இல்லை என்பதை கண்டுபிடிக்கிறாள் ராதிகா இன்றைய எபிஷோடில்…

Vijay TV bakiyalakshmi serial today episode bakiya lands in trouble: இனியா ஸ்கூலில் பாராட்டியதை பெருமையுடன் தன் வீட்டில் சொல்கிறாள் பாக்கியா. டாக்குமெண்டில் தப்பு எதுவும் இல்லை என்பதை கண்டுபிடிக்கிறாள் ராதிகா இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: கோபி ஏன் பொய் சொன்னாரு… குழப்பத்தில் ராதிகா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

தனது வக்கீலுக்கு போன் செய்யும் ராதிகா, வீட்டினுடயை டாக்குமெண்ட்ஸை சரிபார்க்க சொல்லி கேட்கிறாள். வக்கீலும் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்கிறார்.

அடுத்ததாக, வீட்டுக்கு வரும் கோபி, பாக்கியா எங்கே என கேட்கிறான். அப்போது பாக்கியா, ஜெனி, எழில், இனியா மற்றும் செல்வி வீட்டுக்குள் வருகிறார்கள். நல்லபடி சமைச்சு முடிச்சாச்சு என பாக்கியா சொல்கிறாள். ஜெனியிடம் வேலை கஷ்டமா இருந்துச்சா என செழியன் கேட்க, கோபியோ நீ ஏம்மா போன என கேட்கிறான். அதுக்கு ஜெனி அதெல்லாம் ஒன்னும் இல்ல விடுங்க என, பாக்கியா சூப்பரா சமைச்சதாக சொல்கிறாள்.

publive-image

பின்னர் சாந்தி பொறாமைப்பட்டு உதவி செய்யாததை கூறுகிறாள் செல்வி. அப்போது கோபி, இப்படி வெளில நிறைய அரசியல் இருக்கும் என சொல்ல, அதற்கு ஜெனி அவங்க வெளியில போனதானே என குத்தலாக சொல்கிறாள். அப்போது எழிலும் அம்மாவ வெளியில் விடறதே இல்ல, இப்ப அதையும் மீறி அம்மா சூப்பரா சமைச்சிருக்காங்க, என கோபமாக சொல்கிறான். இனியாவும் ஸ்கூலில் எல்லாரும் அம்மாவை பாராட்டுனதா சொல்ல கோபி ஒரு மாதிரி ஆகிறான். இனியா நா அம்மாவ ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக வெட்கப்படுவேன், ஆன இப்ப பாக்கியாவோட புள்ள இனியானு எல்லோரும் சொல்றாங்க, எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்கிறாள்.

Advertisment
Advertisements

பாக்கியா, எனக்கு ஒரு அடையாளம் இப்ப இருக்கு, அது தான் எனக்கு பெருமை என சொல்லிவிட்டு, எல்லோருக்கும் காபி எடுத்துட்டு வர கிளம்புகிறாள்.

அடுத்ததாக, ராதிகாவுக்கு போன் செய்யும் வக்கீல் டாக்குமெண்ட் எல்லாம் சரியா இருக்குறதா சொல்ற, அதைக்கேட்டு அதிர்ச்சியாகும் ராதிகா, என் ஃபிரண்ட் டாக்குமெண்ட்ல பிரச்சனை இருக்குறதா சொன்னாரு என வக்கீலிடம் சொல்கிறாள். ஆனா வக்கீலோ எல்லாமே சரியா இருக்கு, உங்க ஃபிரண்ட் சரியா பாக்காம சொல்லிருப்பாரு என சொல்கிறார். நா அந்த வீட்டை வாங்கலாமா என ராதிகா கேட்க நிச்சயம் வாங்கலாம் எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார் வக்கீல். பின்னர் கோபி ஏன் டாக்குமெண்ட்ல பிரச்சனை இருக்குனு சொன்னாரு என யோசிக்கிறாள் ராதிகா.

அடுத்த நாள், போனில் மெசேஜ் செய்து கொண்டிருக்கிறான் எழில், அப்போது அங்கு பாக்கியா வர, போனை மறைக்கிறான் எழில். என்ன விஷயம் கேட்க அம்ரிதாகிட்டதான் மெசேஜ் பண்ணிக்கிட்டு இருக்கேன் என சொல்கிறான் எழில். பின்னர் அம்ரிதாவைப் பற்றி பாக்கியா, கேட்க அம்ரிதாவுக்கு கல்யாணமாகி, அவ புருசன் இறந்து விட்டதையும், இப்ப அவ மாமனார் மாமியார் கூட இருக்காங்க என்பதையும் எழில் சொல்ல, அம்ரிதா மீது பரிதாபப்படுகிறாள் பாக்கியா.

publive-image

பின்னர் பாக்கியா அம்ரிதாவுக்கு நீ ஒரு நல்ல ஃபிரண்டா இருக்கனும், அவளுக்கு வேண்டியதை செஞ்சு கொடுக்கனும், என சொல்கிறாள். எழிலும் கண்டிப்பாக செய்வதாக சொல்கிறான். மேலும் பாக்கியா, அம்ரிதாவை வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்கிறாள். எழிலும் கூட்டி வர ஒத்துக் கொள்கிறான். அம்ரிதா நல்லா இருக்கனும், அவளுக்காக நா சாமிக்கிட்ட வேண்டிக்கிறேன் என பாக்கியா சொல்கிறாள்.

publive-image

அப்போது பாக்கியா வீட்டிற்கு வருகிறாள் வீட்டு ஓனர் அம்மா, அவளிடம் ராதிகா வீடு வேண்டாம் என சொல்லியதால் அட்வான்ஸை திருப்பி கேட்கிறாள். அதற்கு வீட்டு ஓனரம்மா, உங்களுக்கு வீடு பிடிச்சிருந்தா மட்டும் அட்வான்ஸ் கொடுக்கலாம், ஆனா யோசிக்காம அட்வான்ஸ் கொடுத்துட்டு இப்ப திருப்பி கேட்ட எப்படி என கேட்கிறாள். எழில் ரெண்டு நாள் ஆகுதுதானே என சொல்ல, நாங்க பணத்தை செலவு பண்ணிட்டோம், இப்ப உடனே திருப்பி தர முடியாது என சொல்கிறாள். மேலும் பத்திரத்தில் தப்பு இருப்பதாக சொன்னது ரொம்ப வருத்தமா இருக்கு என சொல்கிறாள். டாக்குமெண்ட்ல என்ன தப்பு என வீட்டு ஓனர் அம்மா கேட்க அதெல்லாம் எனக்கு தெரியாது என பாக்கியா சொல்கிறாள். இதனால் பணத்தை இப்ப திருப்பி தர முடியாது என கோபமாக கூறிவிட்டு செல்கிறாள் வீட்டு ஓனர் அம்மா. பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறாள். அப்போது எழில் ராதிகாகிட்ட இந்த விஷயத்தை சொல்லுங்க என சொல்கிறான். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Today Episode Bakiyalakshmi Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: