விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
தான் படிக்க வேண்டுமென தன் கணவர் கணேசன் ஆசைப்பட்டதாக எழிலிடம் கூறுகிறாள் அம்ரிதா. ஹாஸ்பிட்டலில் அடிபட்டு கிடக்கும் கணேசன், தன் பெற்றோரிடம், அம்ரிதா பிறந்த நாள் பரிசா, அவ படிக்கனும் என்று கேட்டாள் அதை எனக்காக செஞ்சுருங்க என சொன்னதோடு இறந்து விடுகிறான். இதைக் கேட்கும் எழில் அம்ரிதா மீது பரிதாபப்படுகிறான். இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிட்டு உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழுறது பெரிய விஷயம் என பாராட்டுகிறான். அதற்கு நா எதையும் மறைக்க விரும்பல, ஆனா எப்படி சொல்றதுனு தான் தெரியல, அதனால தான் சொல்ல என அம்ரிதா சொல்கிறாள்.
இதெல்லாம் நடந்து இரண்டு வருஷமாச்சு, கணேசனோட அப்பா, அம்மாவ என்னோட மாமனார், மாமியார்னு சொன்ன இங்க எல்லார்கிட்டயும் நா நடந்தெல்லாம் சொல்லனும், அதனால் தான் அவங்கள என் அப்பா அம்மானு சொன்னேன் என அம்ரிதா சொல்கிறாள். இவ்வளவு நாள் உங்ககிட்ட பேசுனது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு என அம்ரிதா சொல்ல அதிர்ச்சியாகும் எழில் இனிமே என்கூட பேசமாட்டீங்களா என கேட்கிறான். அதற்கு அம்ரிதா, எனக்குனு நிறைய கட்டுபாடுகள் இருக்கு, உங்கள இரண்டு நாள் பார்க்க வந்ததுக்கே இவ்வளவு பிரச்சனை அதான் என்கிறாள் அம்ரிதா. அதற்கு எழில், நீங்க எடுத்த முடிவு தப்பு, நீங்க எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட், அதனால பேசாம போறது சரியில்ல, என்கிட்ட பேசாம இருந்தீங்கனா என்னால தாங்கிக்க முடியாது என என்கிறான். அதற்கு அம்ரிதா, உங்களுக்கு நல்ல ஃபிரண்டா இருப்பேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.
அடுத்ததாக, ஸ்கூலுக்கு போன பாக்கியா இன்னும் வரல என கவலையோடு காத்திருக்கிறாள் ஜெனி. அங்கு என்ன நடந்துச்சோ என எல்லோரும் கவலையோடு இருக்க, அப்போது அங்கு சந்தோஷமாக வருகிறாள் பாக்கியா. எல்லோரும் என்ன ஆச்சு என கேட்க, சிரித்துக் கொண்டே இருக்கிறாள் பாக்கியா. இதனால், எல்லோரும் டென்ஷனாக, பாக்கியா, ஏற்கனவே ஸ்கூலில் நடந்த விஷயங்களைக் கூறி அதனால் இந்த முறையும் பயந்ததாக கூறி மீண்டும் சிரிக்கிறாள். எல்லோரும் கோபப்பட, பாக்கியா சந்தோஷமாக தனக்கு சமையல் ஆர்டர் கிடைத்ததை சொல்கிறாள். இனியா தான் எனக்கு நல்ல சமைக்க தெரியும்னு சொல்லி இருக்கிறாள் அதனால் தான் இந்த ஆர்டர் கிடைச்சிருக்கு என்கிறாள். இதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷமாகிறார்கள்.
செல்வி சந்தோஷமாக நாம அடுத்த லெவல் போகப் போறோம் என சொல்ல, பாக்கியா ஆமா என்கிறாள். மேலும், நா ஸ்கூல்ல ஒரு தடவை கூட படபடப்பு இல்லாம இருந்ததில்ல, ஆனா இன்னைக்கு நா கெத்த அங்க இருந்தேன் என மகிழ்ச்சி அடைகிறாள். பின்னர் இந்த சந்தோஷத்தை கொண்டாட ஸ்வீட் செய்வோம் என செல்வி மற்றும் ஜெனியை அழைத்துக் கொண்டு கிச்சனுக்கு செல்கிறாள். ஈஸ்வரியோ சமையல் ஆர்டர் கிடைச்சவுடனே அவ எப்படி ஒடுற என எரிச்சலாகிறாள்.
ராதிகா வீட்டிற்கு வருகிறான் கோபி. அப்போது வெளியே கிளம்ப தயாராகும் ராதிகாவிடம் எங்க போற என கேட்கிறான். அதற்கு ராதிகா டீச்சர் சொன்ன வீட்ட போய் பார்க்க போறேன் என்கிறாள். அதிர்ச்சியாகும் கோபி, ராஜேஷ் இங்க வந்து எதாவது தொந்தரவு பண்ணானா என கேட்க, அதற்கு அவன் வரலை என்கிறாள். பின்னர் கோபி, பேங்க்ல லோன் கட்டாம ஏலத்துக்கு வரும், 3,4 வீடுகளை பார்த்து வச்சுருக்கேன். அதுவும் மயூ ஸ்கூலுக்கு பக்கத்துல என சொல்கிறான். அதற்கு ராதிகா கண்டிப்பா அந்த வீடுகள பாக்கலாம், அதுக்கு முன்னாடி நா இந்த வீட்ட போய் பார்த்துட்டு வந்துடுறேன் என கோபிக்கு அதிர்ச்சி அளிக்கிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil