Vijay TV serial: எங்க அம்மாகிட்ட ஏன் சண்டை போடுறீங்க… மயூவின் கேள்வியால் திணறும் கோபி

Vijay TV bakiyalakshmi serial today episode radhika achieves her goal: ராதிகாவிடம் கோபப்படும் கோபியிடம் சண்டை போடும் மயூ, வீடு வாங்க அட்வான்ஸ் கொடுக்கும் ராதிகா இன்றைய எபிஷோடில்…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

ராதிகா அந்த வீட்டை வாங்க போவதாக ஈஸ்வரியிடம் பாக்கியா சொல்ல, அதற்கு கோபி உன் ஃபிரண்ட் என்ன மாத்தி மாத்தி பேசுறாங்க, முதல்ல வீடு வேணும்னு சொன்னாங்க, அப்பறம் வேண்டாம்னு சொன்னாங்க, இப்ப வேணும்னு சொல்றாங்க, ஒழுங்கா ஒரு முடிவு எடுக்க தெரியாதா என கோபப்படுகிறான். பின்னர் பாக்கியா, ராதிகாவை யாரோ குழப்பி விட்டதாக கூறுகிறாள். இப்ப வீடு வாங்குறதுல ராதிகா உறுதியா இருக்காங்க என்கிறாள். இதைக்கேட்டு எரிச்சலுடன் தன்னுடயை அறைக்கு செல்கிறான் கோபி.

தன்னுடைய அறையில் கோபி, ராதிகா மற்றும் பாக்கியா மீது கோபத்தோடு கத்திவிட்டு பாக்கியா கொடுத்த சட்டையை மாற்றிவிட்டு வெளியே கிளம்புகிறான். ஏன் சட்டையை மாத்துனிங்க என பாக்கியா கேட்க கறை இருந்துச்சு என பொய் சொல்லிவிட்டு கிளம்புகிறான். அவனுடயை கோபத்திற்கு காரணம் என்ன என கோபியின் அப்பா கேட்க, ராதிகாவுக்கு வீடு வாங்கி கொடுக்குறது அவனுக்கு பிடிக்கல என சொல்கிறாள் ஈஸ்வரி. அவங்க வீடு வாங்குறதுல இவனுக்கு என்ன பிரச்சனை என கோபியின் அப்பா கேட்க, எதுவும் பிரச்சனை வந்துட கூடாதுனு கவனமா இருக்கான் அதான் என சொல்கிறாள் ஈஸ்வரி. பின்னர் பாக்கியா கோபி கழட்டி போட்ட சட்டையில் கறை இல்லையே, ஏன் பொய் சொன்னாரு என யோசிக்கிறாள்.

அடுத்ததாக ராதிகா வீட்டிற்கு வருகிறான் கோபி. வீடு நிச்சயமா வாங்கா போறியா என கோபி கேட்க, கண்டிப்பா வாங்க போறேன் என உறுதியாக சொல்கிறாள் ராதிகா. அதற்கு கோபி என்கிட்ட சொல்லாம நீ முடிவு பண்ணிட்டியா என கோபமாகிறான். நா உன் மேல அக்கறை எடுத்து இவ்வளவு சொல்றேன் நீ கேட்க மாட்டியா என கத்துகிறான். ஆனால் ராதிகா உறுதியாக இருக்கிறாள். மேலும் அந்த வீடு வாங்கறதுல உங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்ன பிரச்சனை என கேட்கிறாள். நீ வீடு வாங்குறதுல எனக்கு சந்தோஷம் தான் ஆனா, நா பிரச்சனை இருக்குனு சொன்னதுக்கு அப்புறமும் நீ என்கிட்ட சொல்லமா வீடு வாங்க போறதுதான் எனக்கு பிடிக்கல என்கிறான் கோபி. என்ன நீ மதிக்காத போது நா ஏன் இங்க வர்றேன்னு எனக்கு தெரியல என கோபமாக கத்துகிறான்.

இதைப்பார்த்த மயூ உடனே, அங்கிள், எதுக்காக எங்க அம்மாகிட்ட சண்டை போடுறீங்க என கேட்கிறாள். ராதிகா மயூவை தடுக்க மயூவோ, நீ சும்மா இரும்மா எனகூறிவிட்டு கோபியிடம், ஏன் கத்துறீங்க என கேட்கிறாள். உடனே கோபி நா சும்மாதான் பேசிக்கிட்டு இருக்கேன் என மன்னிப்பு கேட்கிறான். மயூ இனிமே எங்க அம்மாகிட்ட கத்த கூடாது என கோபமா சொல்ல, கோபி மன்னிப்பு கேட்டவாறே வெளியே செல்கிறான். பின்னர் மயூ ஏன் அப்பாவும், இந்த அங்கிளும் உங்ககிட்ட சண்டை போடுறாங்க என கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை என சமாளிக்கிறாள். மயூவோ அங்கிள் ஏன் இப்படி கத்துறாங்க என கேட்க, அந்த வீடு வாங்குறதுல எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாதுனு அக்கறையில சொல்றாங்க என மயூவை சமாதானம் செய்கிறாள் ராதிகா.

அடுத்ததாக பாக்கியா வீட்டில் ராதிகா, வீடு வாங்குறதுல உங்க எல்லாரையும் கஷ்டபடுத்துறேன் என மன்னிப்பு கேட்கிறாள். அப்போது அங்கு வருகிறாள் சுந்தரி. டாக்குமெண்ட்ல சந்தேகம்னா எங்கிட்ட கேக்கலாமே என ராதிகாவிடம் கேட்க, ராதிகா மன்னிப்பு கேட்டுவிட்டு, வீடு வாங்க செக் கொடுக்கிறாள். பின்னர் ஈஸ்வரி எப்ப பால் காய்ச்ச போற என கேட்க, அந்த வீட்டில் இருக்க முடியாது, உடனே காலிபண்ணிட்டு இங்க வந்துட வேண்டியதுதான் என்கிறாள். பின்னர் வெள்ளிக்கிழமை பால் காய்ச்சுவதாக எல்லோரும் முடிவு செய்கிறார்கள். எல்லாத்துக்கும் பாக்கியாவிற்கு நன்றி சொல்லிட்டு கிளம்புகிறாள் ராதிகா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv serial bakiyalakshmi today episode radhika achieves her goal

Next Story
ஷிவாங்கி லாக் டவுன் பார்ட்டி: அம்மா நல்லா பாடுறாங்களே..!Cooku with comali Sivaangi Tamil News: Sivaangi Birthday VLOG video goes trending in YouTube
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express