Advertisment

Vijay TV Serial: வீடு பால் காய்ச்சுவதற்கு கோபியை அழைக்கும் ராதிகா… பாக்கியாவும் கூப்பிட சிக்கலில் கோபி

Vijay TV bakiyalakshmi serial today episode radhika invites gopi: வீடு பால் காய்ச்ச மாறி மாறி கோபியை கூப்பிடும் பாக்கியா ராதிகா, என்ன செய்வது என தெரியாமல் முழிக்கும் கோபி இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: வீடு பால் காய்ச்சுவதற்கு கோபியை அழைக்கும் ராதிகா… பாக்கியாவும் கூப்பிட சிக்கலில் கோபி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

வீட்டில் டென்ஷனாக இருக்கும் கோபியிடம், இன்னைக்கு ராதிகா நம்ம வீட்டுக்கு வந்தாங்க எனவும், சுந்தரி அக்காவை கூப்பிட்டு வீடு வாங்க அட்வான்ஸ் கொடுத்துவிட்டதாகவும் கூறுகிறாள் பாக்கியா. மேலும் ராதிகா அந்த வீட்டுக்கு உடனே குடிவர போறாங்க என்றும் கூறுகிறாள். இதைக் கேட்டு கோபப்படும் கோபி, பேசாம அந்த ராதிகாவையும் மயூவையும் நம்ம வீட்லேயே தங்க வைக்க வேண்டியதுதானே என எரிந்துவிழுகிறான்.

உன்னோட ஃபிரண்ட் வீடு வாங்குனா எனக்கு என்ன? எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு என கத்துகிறான் கோபி. நீங்க சந்தோஷப்படவீங்கனு தான் சொன்னேன், சரி விடுங்க என பாக்கியா சொல்ல, நீ இந்த மாதிரி நம்ம வீட்டு பிரச்சனைக்கு முன்னாடி நின்னு, ஏதாவது தைரியமா முடிவு எடுத்துருக்கியா என கேட்கிறான் கோபி. அதற்கு பாக்கியா நீங்க எங்க என்ன நம்புறீங்க, அவங்க என்ன நம்புறாங்க, நா செய்றது சரினு உங்க அப்பா அம்மாவே சொல்றாங்க என கோபியிடம் எதிர்த்து பேசுகிறாள்.

publive-image

கோபியோ நீ என்னைக்காவது என்கிட்ட அன்பா பேசிருக்கியா, எப்ப பார்த்தாலும் ஃபிரண்ட்ஸ், மசாலானு தான் பேசிக்கிட்டு இருக்க என கோபப்படுகிறான். அதற்கு அப்பாவியாக அன்பா இருக்குறது எப்படினு சொல்லுங்க என்கிறாள். கோபியோ கோபம் தலைக்கேறி பாக்கியாவை வெளியே போகச் சொல்கிறான்.

அடுத்ததாக, வீட்டு ஹாலில் எல்லோரும் அமர்ந்திருக்க இனியாவிடம் படிப்பு எப்படி போகுது என கேட்கிறான். இனியா நல்ல படிப்பதாக கூறுகிறாள். தாத்தா உனக்கு பாடத்துல சந்தேகம் இருந்த என்கிட்ட கேளு என தாத்தா கேட்க, ஈஸ்வரியோ நீங்க எப்படியோ ஹெட்மாஸ்டர் ஆகிட்டிங்க, உங்களுக்கு இனியாவுக்கு சொல்லி தர்ற அளவுக்கு என்ன தெரியும் என கலாய்க்கிறாள். பின்னர் ஈஸ்வரி பெயிண்ட் அடிக்கிறது என்ன ஆச்சு என கோபியிடம் கேட்க, பெயிண்டர்ஸ் கிடைக்கல என சொல்கிறான் கோபி. அப்ப போட்டோ எல்லாம் எடுத்து மாட்ட வேண்டியது தான் என ஈஸ்வரி சொல்ல பதற்றமாகும் கோபி, இன்னும் ஒரு நாள் வெயிட் பண்ணுங்க நா பெயிண்டர்ஸ் யாராவது கிடைக்குறாங்களானு பார்க்குறேன் என்கிறான் கோபி.

அடுத்ததாக, அம்ரிதாவிடம் காலேஜ் முடிச்சுட்டு என்ன செய்ய போறிங்க என எழில் கேட்க, கவர்மெண்ட் எக்ஸாம் எழுதப்போறேன் என்கிறாள் அம்ரிதா. அதற்கு எழில் நீங்க சினிமாவுல டிரை பண்ணுங்க என சொல்கிறான். பின்னர் அம்ரிதா வீட்டு டென்ஷன்ல இருந்து என்ன மீட்க போறதா சொன்னிங்க, என்ன செய்ய போறிங்க என எழிலிடம் கேட்கிறாள். அதற்கு எழில் அவங்க குடும்பத்தைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்கிறான்.

அடுத்து, கோபிக்கு ராதிகா போன் செய்து, மயூ பேசுனத சீரியஸா எடுத்துக்காதீங்க, என் மேல கோபமா என கேட்கிறாள். அதற்கு கோபி என்னோட பேச்ச மதிக்காததால நா விலகி நிக்கிறேன் என்கிறான். மேலும் நா எது சொன்னாலும் நீ தப்ப நினைக்குற என கோபி கூற, அதெல்லாம் ஒன்னும் இல்லை என சமாதானம் செய்கிறாள். பின்னர் கோபியிடம் நாளைக்கு வீட்டுக்கு பால் காய்ச்ச போறோம் எனச் சொல்கிறாள். கோபியோ நீ வீடு வாங்குறதுல எனக்கும் பங்கு இருக்கும்னு நினைச்சேன் ஆனா நீ கேக்கல எனச் சொல்ல, அதற்கு ராதிகா ராஜேஷால இங்க நிறைய பிரச்சனை அதான் உடனே வீட்ட வாங்கிட்டேன், டீச்சர் குடும்பத்து மேலேயும் நிறைய நம்பிக்கை இருக்கு என்கிறாள்.

பின்னர் பால்காய்ச்சுக்கு நீங்க வாங்க எனக் கூப்பிடுகிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் கோபி, நா வந்த டீச்சர் குடும்பத்துக்கிட்ட என்னை யாரு சொல்லுவ என கேட்க, அதற்கு ராதிகா என் ஃபிரண்ட்னு சொல்றேன் என்கிறாள். ஆனால் அது சரியா வராது சமாளிக்க பார்க்க, ராதிகாவோ நீங்க கண்டிப்பா வரணும் என்றவாறே போனை வைக்கிறாள்.

publive-image

அடுத்து, ராதிகா வீட்டுக்கு போவதைப்பற்றி பாக்கியா வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியா கோபியையும் ராதிகா வீட்டுக்கு கூப்பிட, நா அங்க வந்து என்ன பண்ண போறேன், நா வரலை என சொல்கிறான். ஈஸ்வரியும் கூப்பிட, ராதிகா யாரு நமக்கு என வேண்டா வெறுப்பாக பேசுகிறான். உடனே இனியா ராதிகாவை பத்தி பேசுன நீங்க ஏன் எப்போதும் எஸ்கேப் ஆகுறீங்க என கேட்க, அதிர்ச்சியாகிறான் கோபி. பாக்கியாவும் ஏன் என கேட்க அவங்கள நா ஏன் பார்க்கணும் என சமாளிக்கிறான். எல்லோரும் கோபியை சந்தேகமாக பார்க்க, நாளைக்கு நா வரமுடியாது என கோபி சொல்கிறான். அதற்கு பாக்கியா நீங்க கண்டிப்பா வர்றீங்க என சொல்ல இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Bakiyalakshmi Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment