Vijay TV Serial: பாரதி காரில் லட்சுமி; கண்ணம்மா ஷாக்!

Vijay tv barathi kannamma serial today episode: ஹேமாவும், லட்சுமியும் பாரதியின் காரில் ஜாலியாக வரும் போது, கண்ணம்மா ஆட்டோவிற்காக காத்திருக்கிறாள். அப்போது அந்த வழியாக வரும் பாரதியின் காரில் லட்சுமி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் கண்ணம்மா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகும் சீரியல் பாரதிக்கண்ணம்மா. இதில் அருண் பாரதியாகவும், ரோஷினி கண்ணம்மாவாகவும் நடிக்கின்றனர். வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் ஃபரினா நடிக்கிறார். பாரதியை ஒருதலையாக காதலிக்கும் வெண்பாவால் ஏற்படும் பிரச்சனையை மையப்படுத்தி தற்போது கதை செல்கிறது. அதில் இன்றைய எபிஷோடில்,

பாரதி கோபமாக பேசிய வார்த்தைகளை நினைத்து கவலையாக அமர்ந்திருக்கிறார் சௌந்தர்யா. அவரிடம் அகில், என்னம்மா ரெண்டு நாளா இப்படி உட்கார்ந்து இருக்கீங்க என கேட்கிறான். அதற்கு சௌந்தர்யா, என் முன்னாடியே  கண்ணம்மா வாழ்க்கையை கெடுக்குற மாதிரி ஒரு பொய் சொல்றான் பாரதி. அவகிட்ட என்னைய உண்மைய சொல்லக்கூடாதுன்னு வேற சொல்றான் என சொல்கிறாள். அப்போது குறுக்கிடும் அஞ்சலி, அங்க என்ன நடந்ததுன்னு தெரியாது, ஆனா அந்த வெண்பா பெரிய விஷம் என சொல்கிறாள்.

அதன்பிறகு அகில், அம்மா பாரதி வெண்பாவை ஒரு பகடை காயா பயன்படுத்துறான். ஆனா அவன் அப்படி பண்ண மாட்டான் என சமாதானம் சொல்கிறான். மேலும், இதுவே வெண்பா சைடுல இருந்து பார்த்தா, அவ பாரதிய ஒருதலையா காதலிக்கிறா, ஒரு கல்யாணம் ஆனா பையன் பொண்டாட்டியை பிரிஞ்சு வந்து கேட்கும் போது அவ கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கானா, எல்லாத்துக்கும் அவ தயாரா இருக்கான்னு தான அர்த்தம் என சொல்கிறான். என்னாடா நீ என்னன்னவோ சொல்லி பயமுறுத்துற என சௌந்தர்யா கேட்கிறாள்.

ஒருவேளை பாரதி வெண்பாவ கல்யாணம் பண்ணிக்க நினைச்ச, நம்மால பாரதியை தடுக்க முடியாது. அதனால் வெண்பாகிட்ட நேர்ல போய் நான் பேசுறேன். பாரதியே வந்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னாலும், அவ பண்ண கூடாதுன்னு சொல்லிட்டு வர்றேன் என சொல்லிவிட்டு வெண்பாவை பார்க்க கிளம்புகிறாள். இதற்கிடையில் வெண்பாவிற்கு போன் பண்ணும் பாரதி, அவள் நம்பர் ஆப் ஆகி இருப்பதால் அவளைப் பார்க்க அவளோட மருத்துவமனைக்கு செல்கிறான். அவனுக்கு முன்னாடியே அங்கு வரும் சௌந்தர்யா மருத்துவமனை  30 நாட்களுக்கு மூடப்படும் என்ற போஸ்டரை பார்த்து திரும்பிச் செல்கிறாள்.

அதன்பிறகு அங்கு வந்து நோட்டீசை பார்க்கும் பாரதியிடம் சௌந்தர்யா வந்து போன விஷயத்தை வாட்ச்மேன் சொல்கிறான். அதற்குள் வீட்டிற்கு வரும் சௌந்தர்யா ஒரு மாசத்துக்கு நமக்கு வெண்பா பிரச்சனை இல்லை என அகிலிடம் சொல்லி சந்தோஷப்படுகிறாள். இதற்கிடையில் சுமதி வீட்டில், மஞ்சுவிற்கு பழைய சாப்பாட்டை கொடுக்கும் போது அவள் சாப்பிட மாட்டேன் என சொல்லுவதால் அவளை அடிக்கிறாள் சுமதி.

அப்போது அங்கு வரும் கண்ணம்மா, குழந்தைய போட்டு இதுக்கெல்லாமா அடிப்பீங்க என சொல்லி தடுக்கிறாள். இதற்கிடையில் ஹேமாவும், லட்சுமியும் ஸ்கூல் முடிந்து காத்திருக்கின்றனர். அப்போது ஹேமா அடுத்த வாரம் எனக்கு பிறந்த நாள் நீ வர்றியா என சொல்லும் போது, எனக்கும் அடுத்த வாரம் தான் பிறந்தநாள் என சொல்கிறாள். கண்ணம்மா வரும் ஆட்டோ இடையில் ரிப்பேர் ஆகிவிடும் போது, ஸ்கூலுக்கு ஹேமாவை கூப்பிட வரும் பாரதி, ரொம்ப லேட் ஆகிருச்சு வா போற வழில உன்னை இறக்கி விட்றேன் என சொல்லி லட்சுமியையும் காரில் அழைத்துச் செல்கிறான்.

அதன்பிறகு ஹேமாவும், லட்சுமியும் பாரதியின் காரில் ஜாலியாக வரும் போது, கண்ணம்மா ஆட்டோவிற்காக காத்திருக்கிறாள். அப்போது அந்த வழியாக வரும் பாரதியின் காரில் லட்சுமி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் கண்ணம்மா. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv serial barathi kannamma today episode

Next Story
பெண் குழந்தைக்கு தந்தையான தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்; ‘ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என நெகிழ்ச்சி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com