Vijay TV Serial: லட்சுமியின் ‘அப்பா’ ஆசை; அதிர்ச்சியில் கண்ணம்மா!

Vijay tv serial barathi kannamma today episode, laxmi feels barathi as father, kannamma starts business: பாரதி அப்பாவாக இருந்தால் நல்லா இருக்கும் என்று ஏங்கும் லட்சுமி. கண்ணம்மாவின் பிஸினஸ் அவதாரம் இன்றைய எபிஷோடில்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்று என்ன நடந்தது என்பதை பார்ப்போம். நேற்றைய எபிஷோடில் பாரதி லட்சுமியின் பிறந்த நாளுக்கு டிரஸ் வாங்கி தருவதாக கடைக்கு கூட்டிச் செல்வான். இன்று…

பிறந்த நாளுக்கு டிரஸ் வாங்கித் தருவதாக லட்சுமியை கடைக்கு கூட்டிச் செல்கிறான் பாரதி. வெகுநேரமாகியும் லட்சுமி வீட்டிற்கு வராத்தால் கவலையுடன், துளசியுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். லட்சுமி பாரதியின் குழந்தை என்று பாரதி நம்பினால் எல்லா பிரச்சனையும் தீர்ந்ததாக கண்ண்ம்மா சொல்கிறாள். கடவுள்தான் லட்சுமியை பாரதியுடன் சேர்த்து வைக்கிறார் என்கிறாள் துளசி. அப்பொழுது வீட்டிற்கு வருகிறாள் லட்சுமி.

முகமெல்லாம் சிரிப்பாக வரும் லட்சுமியிடம் அதற்கான காரணத்தை கேட்கிறாள் துளசி. அதற்கு லட்சுமி, டாக்டர் அங்கிள் என்னை ஒரு பெரிய கடைக்கு கூட்டிபோய் சூப்பரான டிரஸ் வாங்கி கொடுத்துருக்காரு என சந்தோஷமாக கூறினாள். டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு என கண்ணம்மா சொல்ல, யாரோட செலக்‌ஷன் என லட்சுமியிடம் கேட்கிறாள் துளசி. அதுக்கு என்னோட ஃப்ரண்ட் ஹேமா செலக்‌ஷன் என பதிலளிக்கிறாள் லட்சுமி.

இந்த டிர்ஸ் ரொம்ப காஸ்ட்லி என லட்சுமி சொல்ல, டாக்டர் பெரிய பணக்காரங்க, நம்ம வசதிக்கு இந்த டிர்ஸ் வாங்க முடியாது என சொல்கிறாள் கண்ணம்மா. பின்னர் டாக்டர் அங்கிள் சூப்பரான காஸ்ட்லியான ஐஸ்கீரிம் வாங்கி கொடுத்ததாகவும், நான் நல்ல சாப்பிட்டேன் எனவும் லட்சுமி கூறகிறாள். பின்னர் பிறந்த நாளுக்கு போட்டுக்கலாம் என டிரஸை பீரோவில் வைக்க சொல்கிறாள் கண்ணம்மா.

அப்போது லட்சுமி டாக்டர் அங்கிள் கூட வெளியே போனது ஜாலியாக இருந்ததாகவும், என்னோட அப்பாவா நான் இதுவரை பார்த்ததில்லை. என் அப்பா பேரும் பாரதிதான். நான் அவர் கூட இருந்ததில்லை. ஆன நான் பாரதி கூட இருந்தபோது என் சொந்த அப்பா கூட இருந்த மாதிரி இருந்துச்சு என்கிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் கண்ணம்மா. பின் கார்ட்டூன் பக்கம் பேச்சை திருப்பி மஞ்சு வீட்டிற்கு லட்சுமியை அனுப்புகிறாள் கண்ணம்மா.

மறுபுறம், துர்காவால் கடத்தப்பட்டு கட்டி போடப்பட்டிருக்கும் வெண்பா தாகம் எடுப்பதாக துர்காவிடம் அவன் கையில் வைத்திருக்கும் ஜூஸை கேட்கிறாள். ஆனால் மொத்த ஜூஸையும் குடிப்பதாக இருந்தால் கொடுப்பதாக துர்கா கூறுகிறான். பின்னர் கொஞ்ச கொஞ்சமாக ஜுஸை குடிக்கிறாள் வெண்பா. ஒருகட்டத்தில் போதும் எனகூறும் வெண்பாவை வற்புறுத்தி குடிக்க வைக்கிறான் துர்கா. குடிக்க மறுக்கும் வெண்பாவிடம் நீ செய்த விஷயங்களை வீடியோவாக சோஷியல் மீடியாவில் வைரலாக்குவேன் என்று மிரட்டுகிறான்.

பள்ளியில் வெண்ணிலா டீச்சரிடம் ஏன் இரண்டு நாளா வரலை என கண்ணம்மா கேட்கிறாள். ஒரு கடையில் மாவு வாங்கி சாப்பிட்டதால் ஃபுட் பாயிசன் ஆகி குடும்பமே ஹாஸ்பிட்டலில் இருந்ததாக கூறுகிறார் டீச்சர்.

பின்னர் வீட்டுக்கு வரும் கண்ணம்மா துளசியிடம் புதுச ஒரு தொழில் பண்ணலாம், அதாவது மாவு அரைத்து விற்கலாம் என கூறுகிறாள். அதையும் டோர் டெலிவரி பண்ணலாம் என சொல்கிறாள். இதை துளசியும் மஞ்சுவின் அம்மாவும் நல்ல ஐடியா என பாராட்டுகின்றனர். பின்னர் கடைக்கு லட்சுமி அல்லது கண்ணம்மா இருவரில் யார் பெயர் வைக்கலாம் என விவாதிக்கின்றனர். பின்னர் ஒருவழியாக கண்ணம்மா என்று வைக்கலாம் நீ கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவது எல்லோருக்கும் தெரியட்டும் என துளசி சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv serial barathi kannamma today episode may

Next Story
கல்யாணம் முடிஞ்சிடுச்சா? ‘அவரும்’ மீடியாதானாம்! சன் டிவி சீரியல் நடிகை அப்டேட்Tamil serial update Tamil News: Serial actress Actress Nakshatra Nagesh opens about her marriage
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express