விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்போம். நேற்றைய எபிஷோடில், பாரதியின் காயத்தை நினைத்து கவலைப்படுகிறாள் கண்ணம்மா. கண்ணம்மாவின் மாவு பிஸினஸ் ஆரம்பம், பிறந்த நாள் கொண்டாட லட்சுமியை வெளியே கூட்டிபோகும் கண்ணம்மா என்பதைப் பார்த்தோம்
இன்றைய எபிஷோடில்…
கோவிலில் சாமியை தொட்டு பூஜை செய்ய வேண்டும் என லட்சுமி கூற அதிர்ச்சி அடைகிறாள் கண்ணம்மா. அப்படி செய்ய முடியாது என கண்ணம்மா மறுக்க, குழந்தையும் தெய்வமும் ஒண்ணுதானே நான் ஏன் செய்யக் கூடாது என கேள்வி எழுப்புகிறாள் லட்சுமி. மேலும் இதுதான் என் முதல் ஆசை, நீ பூசாரிக்கிட்ட கேளு என அடம்பிடிக்கிறாள். கண்ணம்மா பூசாரியிடம் லட்சுமியின் ஆசையை கூற பதறிப்போகும் பூசாரி, பின்னர் குழந்தைதானே தாராளமா பண்ணட்டும் என்று சம்மதிக்கிறார். அதன்பின் கருவறைக்குள் சென்று பூஜை செய்கிறாள் லட்சுமி.
அடுத்ததாக பிஸினஸ் ஆர்டர்க்காக போய், கொரோனாவால் கோவாவில் மாட்டிக்கொண்டு தவித்த கதையை சௌந்தர்யாவிடம் சொல்கிறார் அவரது கணவர். அப்போது அங்கு வரும் அகில் நீங்க இல்லாததால் அம்மாவுக்கு பாரதியை பற்றி யாரிடமும் புலம்ப முடியாம போச்சு என்கிறான். பின்னர் எல்லோரும் கொரோனா பாதுகாப்பு பற்றியும் தடுப்பூசி பற்றியும் பேசுகிறார்கள். அங்கு வரும் ஹேமா இவ்வளவு நாளா எங்க போனீங்க தாத்தா என கேட்கிறாள். தாத்தா உன்னை பத்திதான் எப்பவும் நினைச்சுக்கிட்டு இருந்தேன், நீ என்ன பத்தி நினைச்சியா என கேட்டவரிடம், நீங்க இல்லாத குறை தெரியாம பாட்டி என்ன பார்த்துக்கிட்டாங்க என பாட்டியை பெருமையாக பேசுகிறாள்.
நாளைக்கு உன்னுடைய பிறந்த நாளை கொரோனாவால் சின்ன ஃபங்க்ஷனாக கொண்டாடப் போறோம் என சௌந்தர்யா சொல்ல, அப்ப எனக்கு ஒரு கிஃப்ட் வேணும் என்று கேட்டுவிட்டு மௌனமாகிறாள் ஹேமா. எல்லோரும் ஹேமா அம்மாவ பத்தி கேட்க போறாளோ என கவலையாக இருக்க, ஹேமா எனக்கு ஒரு பிளே ஸ்டேசன் வேணும் என்றதும் எல்லோரும் ஆசுவாசமடைகிறார்கள். வீட்டில் எப்பவுமே ஃபோன், லேப்டாப்ல தான் விளையாடிக்கிட்டே இருக்க அதனால் கண்டிப்பா பிளே ஸ்டேசன் வாங்கி தர முடியாது வேற எதாவது கேளு என சொல்கிறாள் சௌந்தர்யா. ஹேமா எல்லோரிடமும் கெஞ்சி கேட்டும் சௌந்தர்யா யாரும் வாங்கித் தரக்கூடாது என கண்டிப்புடன் சொல்லிட்டு செல்கிறாள். ஹேமா சோகமாக இருப்பதைப் பார்க்கும் தாத்தா, நா எப்படியாவது பாட்டிக்கிட்ட கேட்டு வாங்கித் தர்றேன் என ஹேமாவை சமாதானம் செய்கிறார்.
இந்தப் பக்கம் பூஜை முடித்து கண்ணம்மாவுக்கு விபூதி பூசிவிட்டு, பூசாரிக்கு நன்றி சொல்கிறாள் லட்சுமி. பூஜை அறைக்குள் பரவசமாக இருந்ததாக ஆட்டோ டிரைவரிடம் சொல்கிறாள் லட்சுமி. பின்னர் அவர்கள் கோவிலிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு சென்று சாப்பிட முடிவெடுக்கிறார்கள். அப்போது விண்டேஜ் கார் ஒன்று கோவிலுக்கு வருகிறது. அதை ஆச்சரியமாக பார்க்கிறாள் லட்சுமி. அந்தக் காரில் ஒரு ரைடு போக ஆசைப்படுகிறாள் லட்சுமி. கண்ணம்மா அதற்கு மறுக்க, ஆட்டோ டிரைவர் நான் போய் கேட்கிறேன் என ஹேமாவை கார் சொந்தக்காரர்களிடம் கூட்டிச் செல்கிறார்.
கார் ஓனரான வசுந்தராவிடம் கண்ணம்மா, லட்சுமியின் விருப்பத்தைச் சொல்ல வசுந்தரா அதற்கு சம்மதித்து டிரைவரை ஒரு ரவுண்டு கூட்டிப் போகச் சொல்கிறார். பின்னர் மூவரும் காரில் ரவுண்டு போகிறார்கள். லட்சுமி மிகவும் சந்தோஷமாக காரில் இருப்பதைப் பார்த்து கண்ணம்மாவும் சந்தோஷப்பட்டாள்.
அடுத்து, அகிலிடம் பாரதி எங்க என கேட்கிறார் பாரதியின் அப்பா. தெரியவில்லை என அகில் கூற. அங்கு வரும் ஹேமா எனக்கு பர்த் டே கிஃப்ட்டாக செல்போன் வேணும் என்று கேட்கிறாள். அகில் முடியாது என மறுக்க, தாத்தாவிடம் கேட்கிறாள் ஹேமா. அவரும் நீ சின்ன குழந்தை உனக்கு செல்போன் வாங்கித் தர முடியாது என கூற கோபமாகிறாள் ஹேமா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.