Advertisment

ஹேமாவை இங்க கூட்டிக்கிட்டு வாங்க... பாரதிக்கு ஷாக் கொடுத்த கண்ணம்மா

Vijay TV serial barathikannamma new promo update: பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ; ஹேமாவுக்காக கண்ணம்மா வீட்டுக்கு போவானா பாரதி?

author-image
WebDesk
New Update
ஹேமாவை இங்க கூட்டிக்கிட்டு வாங்க... பாரதிக்கு ஷாக் கொடுத்த கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக வெளியாகி இருக்கும் ப்ரோமோ ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Advertisment

பாரதி கண்ணம்மா சீரியலைப் பொறுத்தவரை, கருப்பாக இருக்கும் கண்ணம்மாவை விரும்புகிறான் டாக்டர் பாரதி. ஆனால் இது அவனது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் கண்ணம்மாவை திருமணம் செய்கிறான் பாரதி. கண்ணம்மாவின் நல்ல குணங்களால் மாமியார் சௌந்தர்யாவுக்கு நெருக்கமாகிறாள் கண்ணம்மா.

இந்த நிலையில், இவர்களின் வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறாள் வெண்பா. பாரதியும் கண்ணம்மாவும் பிரிகிறார்கள். கண்ணம்மாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறக்க, அவற்றில் ஒன்றை கண்ணம்மாவுக்கே தெரியாமல் எடுத்துக் கொண்டுபோய் பாரதியிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறாள் சௌந்தர்யா. தன் குழந்தை என்று தெரியாமலே ஹேமாவை பாசமாக வளர்க்கிறான் பாரதி. இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது.

அடுத்து லட்சுமியும் ஹேமாவும் ஒரே ஸ்கூலில் படிக்க. இருவரும் நெருங்கிய தோழியாகிறார்கள். கண்ணம்மா அவர்களின் ஸ்கூலில் சமையல் அம்மாவாக இருக்கிறாள். அதுவும் தன் மகள் என்று தெரியாமலே ஹேமா மீது அளவுகடந்த பாசத்துடன் இருக்கிறாள். ஹேமா கண்ணம்மாவுடன் நெருங்கி பழகுவதைப் பிடிக்காத பாரதி, அவளை அமெரிக்கா கூட்டி செல்ல முடிவெடுக்கிறான். ஆனால் ஹேமாவுக்கு அமெரிக்கா போக விருப்பமில்லை. வீட்டில் எல்லோரும் தடுத்தும் ஹேமாவை அமெரிக்கா கூட்டிச்செல்ல ஏர்போர்ட் அழைத்துச் செல்கிறான் பாரதி.

அப்போது வழியில் ஹேமாவுக்கு வலிப்பு வந்துவிடுகிறது. ஹாஸ்பிட்டலில் சேர்த்து சிகிச்சை அளிக்கையில் ஹேமா சமையல் அம்மா என்று மயக்கத்திலும் சொல்லிக்கொண்டிருக்கிறாள். இதைப்பார்த்த டாக்டர் பிரியா ஹேமாவுக்கான மருந்து கண்ணம்மா தான் என்று பாரதியிடம் சொல்கிறாள். எல்லோரும் கண்ணம்மாவை அழைத்து வர பாரதியை வற்புறுத்த, கண்ணம்மாவை அழைத்து வரச்செல்கிறான் பாரதி.

கண்ணம்மாவிடம், ஹேமாவுக்கு முடியல நீ என்கூட ஹாஸ்பிட்டலுக்கு வரணும் என கூப்பிடுகிறான். பாரதி மேல் கோபம் இருந்தாலும், ஹேமாவுக்காக செல்கிறாள் கண்ணம்மா. ஹாஸ்பிட்டலில் கண்ணம்மா அழைத்ததும் ஹேமா கண்விழிக்கிறாள். அப்போது பிரியா, நாங்க எவ்வளவோ ட்ரீட்மெண்ட் செய்தும் கண்விழிக்காத ஹேமா, சமையல் அம்மா வந்தவுடன் சிரிக்கிறா பாரு என பாரதியிடம் சொல்கிறாள்.

ஹேமாவை ஜூஸ் குடிக்க பிரியா சொல்ல, கண்ணம்மாவை கொடுக்க சொல்கிறாள். பின்னர் அமெரிக்கா போக விருப்பமில்லை என ஹேமா அழ, டிக்கெட்டை கிழித்துப் போடுகிறான் பாரதி. சௌந்தர்யா ஹேமாவுக்காக நீ விட்டுக்கொடுத்து தான் போகனும் என பாரதிக்கு அறிவுரை சொல்கிறாள்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஹேமாவுக்கு திரும்பவும் உடம்பு சரியில்லாமல் போகிறது. டாக்டர் கண்ணம்மா தான் மருந்து என்று சொல்ல, கண்ணம்மாவை அழைத்து வர சொல்கிறாள் சௌந்தர்யா. பாரதியும் கண்ணம்மா வீட்டுக்கு சென்று, ஹேமாவுக்கு உடம்பு சரியில்லை, நீ ஒரு வாரத்துக்கு அவளோட இருக்கனும், அதான் உன்ன கூட்டி போக வந்தேன் என அழைக்கிறான் பாரதி. அதுக்கு நான் ஏன் அங்க வரணும், ஹேமாவ இங்க கூட்டிட்டு வந்துவிடுங்க என சொல்கிறாள் கண்ணம்மா. இதைக்கேட்டு டென்ஷனுடன் கிளம்புகிறான் பாரதி. இப்படியாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஆனால் ஹேமாவுக்காக பாரதி, கண்ணம்மா வீட்டுக்கு ஹேமாவுடன் வருவான் என தெரிகிறது. ஏனென்றால் கண்ணம்மா வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது குறிப்ப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment