Vijay TV serial; அமெரிக்கா செல்ல முடிவெடுக்கும் பாரதியை தடுக்க திட்டம் போடும் வெண்பா…

Vijay TV barathikannamma serial today episode barathi shocks venba: சமையல் வேலையை விடக்கூடாது என கண்ணம்மாவிடம் வற்புறுத்தும் சௌந்தர்யா… அமெரிக்கா போவதாக வெண்பாவிடம் குண்டைத் தூக்கிபோடும் பாரதி இன்றைய எபிஷோடில்…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

புதுப்பெண்ணாக புடவைக் கட்டி அசத்தலாக நிற்கும் வெண்பாவை ஆச்சரியமாக பார்க்கிறாள் சாந்தி. ஏன் இப்படி மாறி இருக்கீங்க என சாந்தி கேட்க, பாரதியிடம் நல்ல குடும்ப பெண் என பெயர் எடுக்கத்தான் இந்த கெட்டப் சேஞ்ச் என்கிறாள் வெண்பா.

அடுத்ததாக, ஸ்கூலில் கண்ணம்மாவை பார்க்கிறாள் சௌந்தர்யா. ஏன் சமையல் வேலையை விட போற என கேட்கிறாள் சௌந்தர்யா. அதற்கு கண்ணம்மா வெளியில நிறைய வேலை இருக்கு என மழுப்பலாக பதில் சொல்கிறாள். ஏன் பொய் சொல்ற, நீதான் சமையல் அம்மாங்கிறது பாரதிக்கு தெரிஞ்சதால தான் வேலைய விடுறியா என கேட்கிறாள். மேலும் நீ இல்லனா ஹேமா என்ன பண்ணுவா என கேட்கிறாள் சௌந்தர்யா. அதற்கு கண்ணம்மா யாருக்கும் தொந்தரவு வரக் கூடாதுனு தான் ஒதுங்கி போறேன் என்கிறாள்.

அப்போது சௌந்தர்யா, அமெரிக்கா போறத நினைச்சு ஹேமாவுக்கு காய்ச்சல் வந்துருச்சு, அவ எப்ப பார்த்தாலும் சமையல் அம்மானு உன்ன தான் சொல்லிகிட்டு இருக்கா என சொல்கிறாள். மேலும் ஹேமாவுக்கு ஒரு பக்கம் அப்பாவால பிரச்சனை, இன்னொரு பக்கம் அம்மாவால பிரச்சனை என்கிறாள். அம்மாவால பிரச்சனையா என யோசிக்கும் கண்ணம்மா, வெண்பா பிரச்சனை பண்றாளா என கேட்கிறாள். சுதாரித்துக் கொண்ட சௌந்தர்யா, சமையல் அம்மானு உன்ன தான் சொன்னேன் என சமாளிக்கிறாள். அதற்கு கண்ணம்மா, ஹேமாகூட ஒரு இனம் புரியாத பாசம் இருக்கு, ஆனா பாரதிக்கு நா ஹேமா கூட பழகுறது பிடிக்கல என்ன பண்றது எனக் கேட்கிறாள். அப்போது சௌந்தர்யா எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல, நீங்க சேர்த்து இருக்கலானாலும், பசங்க ஒண்ணா இருக்குறது சந்தோஷமான இருந்துச்சு, இப்ப அதுக்கும் ஆப்பு விழுந்துருச்சு என்கிறாள்.

அப்போது அங்கு வரும் லட்சுமி, சௌந்தர்யாவிடம் ஹேமாவை பற்றி விசாரிக்கிறாள். நா உங்க வீட்டுக்கு வந்து ஹேமாவ பாக்கட்டுமா எனவும் லட்சுமி கேட்கிறாள். உடனே லட்சுமி கண்ணம்மாவிடம் திரும்பி, சமையல் அம்மா நா போய் ஹேமாவ பார்த்துட்டு வரட்டுமா என கேட்க, சரி என்கிறாள் கண்ணம்மா. பின்னர் சௌந்தர்யா லட்சுமியை காருக்கு அனுப்பி விட்டு கண்ணம்மாவிடம், லட்சுமி ஏன் உன்ன சமையல் அம்மானு கூப்புடுறா, என கேட்கிறாள். மேலும் யாருக்கும் லட்சுமியோட அம்மா நீதானு தெரியக் கூடாதுனு இப்படி பண்றியா என கேட்கிறாள். பின்பு நீ இப்படி பண்ணாத, ஸ்கூல்ல சமைக்குறதையும் விட்றாத என கூறிவிட்டு செல்கிறாள் சௌந்தர்யா.

அடுத்ததாக பாரதியை பார்க்க வருகிறாள் வெண்பா. புடவையில் அழகாக வந்திருக்கும் வெண்பாவை ஆச்சரியமாக பார்க்கிறான் பாரதி. பின்னர் வெண்பா அழகாக இருப்பதாக சொல்கிறான் பாரதி. அதன்பின் என்ன எதுக்கு கூப்பிட்ட என வெண்பா கேட்க, அதற்கு பாரதி நாம இனிமே பார்க்க முடியாது, நா அமெரிக்கா போய் ஹேமாவ அங்க படிக்க வைக்கபோறேன் என்கிறான். ஏன் இங்க வேற நல்ல ஸ்கூல் இல்லயா என வெண்பா கேட்க, எனக்கு கண்ணம்மாகிட்ட இருந்து விலகி இருக்கனும் அதுக்குதான் அமெரிக்கா போறேன் என்கிறான் பாரதி. மேலும், எங்க அம்மா கண்ணம்மாகூட என்ன சேர்த்து வைக்க நிறைய விஷயம் பண்றாங்க, ஆனா நா அவள சாகுற வரைக்கும் மன்னிக்க மாட்டேன் என்கிறான்.

சமையல் அம்மானு சொல்லிக்கிட்டு கண்ணம்மா ஹேமா கூட நெருக்கமாகி வர்ற, எங்க வீட்லயும் இதுக்கு எல்லோரும் சர்போர்ட் பண்ணி, கண்ணம்மாவ என்கூட சேர்த்து வைக்க பிளான் பண்றாங்க, ஹேமாவும் எப்ப பார்த்தாலும் சமையல் அம்மானு தான் சொல்ற, அதை கேட்கும்போது ஆத்திரமா வருது என புலம்புகிறான் பாரதி. மேலும், அம்மா என்ற புனிதமான வார்த்தைக்கு கண்ணம்மா தகுதி இல்லாதவ எனவும் கூறுகிறான். வெண்பாவோ மனதுக்குள், கண்ணம்மா மேல் பாரதி கொலை வெறியா இருக்குறது சந்தோஷமா இருக்கு, ஆனா இவன அமெரிக்கா போகவிடமா தடுக்க என்ன பண்றது என யோசிக்கிறாள்.

நா அமெரிக்கா போறது நல்ல முடிவு தானே என வெண்பாவிடம் கேட்க, அதற்கு வெண்பா நானும் அமெரிக்கா போகப்போறேன் என்கிறாள். நீ எதுக்கு அமெரிக்கா வர்ற என பாரதி கேட்க, உனக்காக தான் என மனதுக்குள் நினைத்துக் கொண்டே, இங்க நிறைய பிரச்சனை இருக்கு அதான் அங்கு வரலாம்னு நினைக்குறேன் என சொல்கிறாள் வெண்பா. அதற்கு பாரதி என்னால் தான் உனக்கு எல்லா பிரச்சனையும், நா போய்ட்ட உனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, நீ இங்கேயே இரு என வெண்பாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

காய்ச்சலால் படுத்திருக்கும் ஹேமாவிடம் சாப்பிட சொல்கிறான் அகில். அஞ்சலி அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிடுகிறாள். அப்போது வரும் லட்சுமியை பார்க்கும் ஹேமா உற்சாகமாகிறாள். எனக்கு அமெரிக்கா போக புடிக்கல, உன்னையும் சமையல் அம்மாவையும் பார்க்க இருக்க முடியல என கவலையாக கூறுகிறாள் ஹேமா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv serial barathikannamma today episode barathi shocks venba

Next Story
இவரு பெரிய படிப்பாளின்னு உங்களுக்கு தெரியுமா? பேனர்லாம் வச்சுருக்காங்களே..!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com