Vijay TV serial; அம்மா சாமிக்கிட்ட போயிட்டாங்க… ஹேமா, சௌந்தர்யாவுக்கு அதிர்ச்சியளிக்கும் பாரதி

Vijay TV serial barathikannamma today episode barathi tells truth: அம்மாவை கேட்டு அழும் ஹேமா, அப்பாவிடம் கேட்க கேள்விகளை தயார் செய்யும் லட்சுமி இன்றைய எபிஷோடில்…

Vijay TV serial barathikannamma today episode barathi tells truth: அம்மாவை கேட்டு அழும் ஹேமா, அப்பாவிடம் கேட்க கேள்விகளை தயார் செய்யும் லட்சுமி இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV serial; அம்மா சாமிக்கிட்ட போயிட்டாங்க… ஹேமா, சௌந்தர்யாவுக்கு அதிர்ச்சியளிக்கும் பாரதி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

எங்க பேர் கண்ணம்மா என சொல்லும் ஹேமாவிடம் உனக்கு எப்படி தெரியும் என கேட்கிறாள் சௌந்தர்யா. பாஸ்போர்ட் அப்ளிகேஷனில் அம்மா பெயர் கண்ணம்மானு இருந்துச்சு, அதை பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன் என்கிறாள் ஹேமா. இதனால், பாரதிக்கு கண்ணம்மா மேல இன்னும் விருப்பம் இருக்கு என முடிவுக்கு வருகிறாள் சௌந்தர்யா. என் அம்மா பேர ஏன் யாரும் இதுவரை என்கிட்ட சொல்ல என கேட்கும் ஹேமாவிடம், நீ கேட்கவே இல்லையே என சமாளிக்கிறாள் சௌந்தர்யா. உடனே ஹேமா, நான் எங்க மாதிரிதான் இருக்கேனு நினைக்கிறேன் என்கிறாள். அடுத்து என் அம்மா கண்டிப்பா சமையல் அம்மா மாதிரி தான் இருப்பாங்க என்கிறாள். இதைக் கேட்டு ஆச்சரியப்படுகிறாள் சௌந்தர்யா.

publive-image

Advertisment
Advertisements

அடுத்ததாக, சாப்பிடும்போது விக்கல் எடுக்கும் கண்ணம்மாவிடம், நம்ம அப்பாதான் உன்ன நினைக்குறாரு என்கிறாள் லட்சுமி. மேலும் அப்பாவ பார்க்குறப்ப, 5 கேள்வி கேட்கபோறேன் என்கிறாள். என் மேல உங்களுக்கு பாசம் இருக்கா? ஏன் போன் பண்ணல? என்னை எப்படி கூப்பிடுவிங்க? நான் எப்படி இருப்பேனு ஞாபகம் இருக்கா? எங்க அம்மா ஏன் வந்து பார்க்கல? அப்படினு கேட்பேன் என்கிறாள் லட்சுமி. இதைக்கேட்டு வாயடைத்துப் போகிறாள் கண்ணம்மா. அடுத்து, நீங்க நல்லவரா? கெட்டவரா? அப்பானு கண்டிப்பா கேட்பேன் என்கிறாள் லட்சுமி.

அடுத்ததாக, நெஞ்சு வலியால் துடிக்கிறாள் அஞ்சலி. உடனே டாக்டருக்கு போன் செய்து, வலி இருப்பதாக கூற, டாக்டர் ரிசல்ட் வந்துருச்சு நேர்ல வாங்க என்கிறார். எங்க வீட்டில் நா யாருகிட்டயும் வலிக்கிறத பத்தி இன்னும் சொல்லல, என்ன விஷயம் என அஞ்சலி கேட்க, நேரில் வர சொல்கிறார் டாக்டர்.

publive-image

அடுத்ததாக, பாரதியிடம், எங்க அம்மா பேரு கண்ணம்மா தானே என்கிறாள் ஹேமா. அதிர்ச்சியடையும் பாரதி, உனக்கு யாரு இத சொன்ன என கேட்க, பாட்டிதான் என சொல்கிறாள் ஹேமா. உடனே சௌந்தர்யா பாஸ்போர்ட் ஆபிஸில் நீ எழுதுனத பார்த்து தான் ஹேமா சொல்றா என சொல்கிறாள். அடுத்து பாரதியிடம், தன் அம்மா பற்றி கேட்கிறாள் ஹேமா. மேலும், அம்மா பத்தி யாருமே பேசமா இருக்கீங்க, எனக்கு அவங்கள உடனே பார்க்கணும் போல இருக்கு, எங்க இருங்காங்க என அழுகிறாள் ஹேமா. பாரதியும், என்ன செய்வது என தெரியாமல் அழுகிறான். அமெரிக்கா, போறதுக்கு முன்னாடி நா அம்மா பார்க்கணும் என்கிறாள். நீங்க பொறந்ததுல இருந்து உங்க அம்மா கூட இருக்கீங்க, ஏன் என்னோட அம்மா என்கூட இல்ல என கேட்கிறாள் ஹேமா.

publive-image

அப்போது பாரதி, ஹேமாவை கட்டிபிடித்து அழுகிறான். உங்க அம்மா உன்ன மாதிரி இருப்பாங்க என்றும் கண்ணம்மாவை கல்யாணம் செய்தது குறித்தும் மறைமுகமாக கூறுகிறான் பாரதி. மேலும், நீ பொறந்த உடனே உங்க அம்மா சாமிகிட்ட போய்ட்டாங்க என பாரதி சொல்கிறான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் சௌந்தர்யா. அம்மாவை பார்க்க முடியாத என அழுகிறாள் ஹேமா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: