விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
ரிசார்ட்டில் இருந்து எல்லோரும் வீட்டுக்கு வருகிறார்கள். ஆனால், ஹேமாவும், பாரதியும் இன்னும் வீட்டுக்கு வராததை நினைத்து கவலைப்படுகிறாள் சௌந்தர்யா. சிறிது நேரத்தில் பாரதியும், ஹேமாவும் வருகிறார்கள். பாரதி அப்போது சௌந்தர்யாவின் மெடிக்கல் ரிப்போர்ட்டைப் பார்த்து ஒன்னும் பிரச்சனையில்லை என சொல்கிறான்.
பின்னர் ஹேமா, சௌந்தர்யாவிடம் அப்பா என்னை அமெரிக்கா கூட்டிட்டு போறேனு சொல்றாரு என வருத்தத்தோடு சொல்கிறாள். அதற்கு பாரதியின் அப்பா வேணு அவனுக்கு என்ன பிரச்சனை, ஏன் இப்படி பண்றான் என கவலைப்பட, ஹேமா, எனக்கு அங்க போக பிடிக்கல என சொல்கிறாள். அப்பாகிட்ட அமெரிக்கா வேண்டாம்னு சொல்லுங்க என கெஞ்சுகிறாள். உடனே சௌந்தர்யா நா அப்பாகிட்ட பேசுறேன் என ஹேமாவை சமாதானம் செய்கிறாள்.
அடுத்ததாக பாரதி பாஸ்போர்ட், விசா ரெடி பண்ணுவது தொடர்பாக ஏஜெண்ட்கிட்ட பேசிக்கிட்டு இருக்கான். அப்போது அங்கு வரும் சௌந்தர்யா ஹேமாவ நா அனுப்ப மாட்டேன் என்கிறாள். அதற்கு பாரதி நா நிம்மதியா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலயா என கோபப்படுகிறான். எங்க எல்லாரையும் விட்டு போகப்போறியா என சௌந்தர்யா கேட்க, இந்த முடிவ எடுக்க நீங்க தான் காரணம் என தன் அம்மா மீதே குற்றம் சொல்கிறான் பாரதி. மேலும் என் வாழ்க்கை இப்படி நாசமா போக காரணமா இருந்த கண்ணம்மாவ சமையல் அம்மானு, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, இப்ப ஹேமா எப்ப பார்த்தாலும் சமையல் அம்மானு சொல்லிகிட்டு இருக்குறா, அதுவும் கண்ணம்மாவ ஹேமா அம்மாவ நினைச்சுக்கிட்டு இருக்கா என கோபமாக பேச, வாயடைத்து நிற்கிறாள் சௌந்தர்யா.
கண்ணம்மாவ நம்ம வீட்டுக்கு வர வச்சது நீங்கதான், இப்ப ஹேமா அவளையே அம்மாவ நினைக்குறா, நா இங்க இருந்த ஹேமா, கண்ணம்மாவோட நெருங்கி பழகுவா, அப்புறம் கடைசியில என்ன விட்டு பிரிந்து போயிடுவா என்னால அத தாங்கிக்க முடியாது என அழுகிறான் பாரதி. மேலும் ஹேமாவ என்கிட்ட இருந்து பிரிக்க பாக்காதீங்க என பாரதி சொல்ல, நாங்க உன்கிட்ட இருந்து பிரிக்க போறோமா என கோபப்படுகிறாள் சௌந்தர்யா. மேலும், உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருக்கா என கேட்க, நீங்க என்ன சொன்னாலும் ஹேமாவ நா அமெரிக்கா கூட்டிட்டு போவேன் என பிடிவாதமாக சொல்கிறான்.
அப்போது சௌந்தர்யா, ஹேமாவ கூட்டிட்டு போக உனக்கு என்ன உரிமை இருக்கு என கேட்க, அதிர்ச்சியாகிறான் பாரதி. மேலும் சௌந்தர்யா ஹேமாவோட அப்பா அம்மா யாருன்னு உனக்கு தெரியுமா, ஹேமாவ உன்கிட்ட கொடுத்ததே நான் தான், என்கிட்ட வந்து ஹேமாவ கூட்டிட்டு போறேனு சொல்றியா என கோபமாக கேட்கிறாள். எதுவும் பேச முடியாமல் நிற்கும் பாரதியிடம், இங்க உனக்கு எல்லா வசதியும் ஏன் அமெரிக்கா போகனும்னு சொல்ற என சௌந்தர்யா கேட்க, எனக்கு இங்க நிம்மதி இல்ல என சொல்கிறான் பாரதி. உடனே சௌந்தர்யா என்ன ஆனாலும் நீ அமெரிக்கா போகக்கூடாது என உறுதியாக சொல்ல, நா கண்டிப்பா போவேன் என பிடிவாதமாக சொல்கிறான் பாரதி.
நீங்க என்ன இங்க இருக்க சொல்றதுக்கு காரணம் கண்ணம்மாவ என்கூட சேர்த்து வைக்கதானே, அது எப்பவுமே நடக்காது, நா இப்பவே போய் பாஸ்போர்ட், விசா வாங்கிட்டு ஹேமா ஸ்கூல்ல போய் சர்ட்டிபிகேட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வர்றேன் என சொல்லிட்டு கோபமாக வெளியேறுகிறான். அவன் என்ன மீறி எப்படி அமெரிக்காவுக்கு போறானு பாக்குறேன் என வேணுவிடம் சொல்கிறாள் சௌந்தர்யா.
அடுத்ததாக, லட்சுமியின் ஸ்கூலுக்கு வருகிறாள் கண்ணம்மா. சிறிது நேரத்தில் ஹேமாவுடன் வரும் பாரதி, பிரின்சிபலை பார்க்க செல்கிறான். அப்போது லட்சுமியும் ஹேமாவும் சந்தித்துக் கொள்ள, அப்போது ஹேமா உன்ன தினமும் பாக்க முடியாது, நா அமெரிக்கா போகப் போறேன் என லட்சுமியிடம் சொல்லி, எனக்கு போக புடிக்கல என அழுகிறாள். டாக்டர் அங்கிள்கிட்ட நா பேசுறேன் என லட்சுமி ஆறுதல் சொல்கிறாள். அப்போது அங்கு கண்ணம்மா வர ஹேமா, கண்ணம்மாவை கட்டிபிடித்து அழுகிறாள். ஹேமா அமெரிக்கா போகபோவதை கேட்டு அதிர்ச்சியாகிறாள் கண்ணம்மா. பாரதிக்கிட்ட கண்ணம்மாவை பேச சொல்கிறாள் ஹேமா. ஹேமா கண்ணம்மாவை கட்டிபிடித்து நிற்பதைப் பார்க்கும் பாரதி அதிர்ச்சியாகிறான். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.