விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
தன்னை பார்க்க வரும் லட்சுமியிடம், உன்னையும் சமையல் அம்மாவையும் தினமும் பார்க்கனும் போல இருக்கு, ஆனா அப்பா என்னை அமெரிக்கா கூட்டிபோறதா சொல்றாரு என வருத்தமாக கூறுகிறாள் ஹேமா. அப்போது அங்கு வரும் பாரதி, லட்சுமியிடம் நீ எப்படி இங்க வந்த என கேட்க, அதற்கு லட்சுமி பாட்டி தான் ஸ்கூலிலிருந்து கூட்டி வந்ததாக கூறுகிறாள் லட்சுமி. இதைக் கேட்டு டென்ஷனாகும் பாரதி, கண்ணம்மாவை பார்க்க தான் அம்மா ஸ்கூல்லுக்கு போனாங்களா என கோபப்படுகிறான்.
அப்போது லட்சுமி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், அங்கிள் ஹேமாவுக்கு சமையல் அம்மாவ பாக்கனும் போல இருக்காம், அவங்கள இங்க வரச்சொல்றீங்களா என கேட்க, டென்ஷன் ஆகும் பாரதி, அந்த சமையல் அம்மாவ ஊரை விட்டே துரத்த போறேன் என லட்சுமி மீது கோபப்படுகிறான். உடனே லட்சுமி, ஏன் சமையல் அம்மாவ ஊரை விட்டு துரத்தனும்னு சொல்றீங்க என கேட்க, அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம் என சொல்கிறான் பாரதி.
ஆனாலும் லட்சுமி விடாமல் சமையல் அம்மா ரொம்ப நல்லவங்க, நீங்க எதுக்கு அவங்க மேல இவ்வளவு கோபப்படுறீங்க என கேட்கிறாள். அதற்கு பாரதி நீ சின்ன பொண்ணு, இதப்பத்தியெல்லாம் கேட்காத, அந்த சமையல் அம்மா ரொம்ப மோசமானவங்க, நீயும் அவங்களோட பழகாத என சொல்கிறான். இதைக் கேட்டு கோபமடையும் லட்சுமி, சமையல் அம்மாவ பத்தி தப்பா சொல்ல நீங்க யாரு என பாரதியை கேள்வி கேட்கிறாள்.
அதிர்ச்சியாகும் பாரதி, சமையல் அம்மாவ பத்தி பேசுனா உனக்கு ஏன் கோபம் வருது? அவங்களுக்கு உனக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறான். சுதாரித்துக் கொண்ட லட்சுமி, அவங்க எங்க ஸ்கூலுக்கு சமைச்சு கொடுக்குறவங்க, அதனால எனக்கு தெரியும் என சமாளிக்கிறாள். பின்னர், ஹேமாவை ஏன் அமெரிக்கா கூட்டிட்டு போகபோறீங்க என கேட்கிறாள். ஹேமாவும் எனக்கு அமெரிக்கா போக பிடிக்கல என சொல்கிறாள். லட்சுமியோ என்னையும் ஹேமாவையும் பிரிக்க பாக்குறீங்களா என பாரதியிடம் கேட்கிறாள். லட்சுமியும் ஹேமாவும் எங்களை பிரிக்காதீங்க என கெஞ்சுகிறார்கள். இதைக்கேட்டு வருத்தப்படும் பாரதி, நா எடுத்த முடிவு தப்போ என யோசிக்கிறான்.
அடுத்ததாக, அகிலுக்கு தெரியாமல் ஹாஸ்பிட்டல் எப்படி போறதுனு யோசிக்கிறாள். அதைப்பார்த்து விடும் அகில், அஞ்சலியிடம் எங்க போற எனக் கேட்கிறான். அஞ்சலி ரெகுலர் செக்கப் அப்க்காக ஹாஸ்பிட்டல் போவதாக கூறி சமாளிக்கிறாள். கூட நானும் வர்றேன் என அகில் சொல்ல, மறுக்க முடியாமல் கூட அழைத்துச் செல்கிறாள்.
அடுத்ததாக, லட்சுமி கண்ணம்மாவிடம், ஹேமா இனி ஸ்கூலுக்கு வர மாட்டாளா என கேட்கிறாள். அதற்கு கண்ணம்மா, அவங்க அப்பா கூட்டிட்டு போனத பார்த்தா அப்படி தான் தெரியுது என்கிறாள். பின்னர் ஹேமாவை பிரிய போவதை நினைத்து கவலையோடு கண்ணம்மாவோடு பேசிக் கொண்டிருக்கிறாள். அப்போது திடீரென லட்சுமி, பாரதி அங்கிளை உனக்கு ஏற்கனவே தெரியுமா? அவருக்கும் உனக்கும் சண்டையா? என கண்ணம்மாவிடம் கேட்கிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் கண்ணம்மா, அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சமாளிக்கிறாள். ஆனால் லட்சுமி விடாப்பிடியாக, சமையல் அம்மானு சொன்னாலே ஏன் பாரதி அங்கிள் கோபப்படுறார் என மீண்டும் கேட்கிறாள். அதற்கு கண்ணம்மா, எனக்கு தெரியாது என எரிச்சலோடு சொல்கிறாள்.
அடுத்து லட்சுமி டாக்டர் அங்கிள் அமெரிக்கா போய்ட்ட, நா இனி அந்த ஸ்கூல்ல படிக்க முடியாதே, அவரு தானே பீஸ் கட்டுறார் என கண்ணம்மாவிடம் சொல்கிறாள். அதெல்லாம் நா பாத்துக்குறேன் என லட்சுமியை தூங்க வைக்கிறாள் கண்ணம்மா. அப்போது கண்ணம்மா வீட்டிற்கு வருகிறாள் சுமதி. வந்து மாவு பிஸினஸ் சரியா போகலை எனச் சொல்கிறாள். கண்ணம்மாவோ அதெல்லாம் பார்த்துக்கலாம் என சொல்ல, சுமதி கிளம்புகிறாள்.
அடுத்ததாக கல்யாணம் ஆன புதிதில் பாரதியும் கண்ணம்மாவும் அன்பாக இருந்த காட்சிகள் வருகிறது. அதில் பாரதியை சாப்பிட வைத்து அழகு பார்க்கும் கண்ணம்மா திடீரென, இப்படி தான் உன் பொண்ணு ஹேமாவுக்கும் நா சாப்பாடு போட்டு உன்கிட்ட இருந்து பிரிக்கிறேன் என மனதுக்குள் நினைக்கிறாள். இதை கனவாக காணும் பாரதி அதிர்ச்சியில் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறான். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.